»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது அடுத்த படத்திலும் கேரளத்து பெண் குட்டியையே அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் சேரன்.

தனது படங்களில் கதாநாயகியாக நடிக்க புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர் சேரன். பாண்டவர் பூமி படத்தில்ஷமீதா என்ற கன்னடத்து நடிகையை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஷமீதாவின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது.

இருப்பினும் பாண்டவர் பூமியை அடுத்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. அதனால் திரும்பவும் அவர் கன்னடத்துக்கேபோய்விட்டார்.

பின்பு சேரன் தனது சொந்த தயாரிப்பில் உருவான ஆட்டோகிராப் படத்தில் கோபிகா, மல்லிகா என்ற இரு நடிகைளை கேரளாவிலிருந்துஇறக்குமதி செய்தார்.

சேரனின் படங்களிலேயே பெரும் வெற்றிப்படமாக ஆட்டோகிராப் அமைந்தது. அதனால் கோபிகாவிற்கும், மல்லிகாவிற்கு தமிழில்நிறைய வாய்ப்புகள் வந்தன.

தொட்டி ஜெயா, கனாக் கண்டேன், பொன்னியின் செல்வன் என்று கோபிகா கை நிறைய வாய்ப்புக்களுடன் பிஸியாக இருக்கிறார். மல்லிகாஅவரது முகவெட்டிற்கு ஏற்றாற்போல தங்கை, செகண்ட ஹீரோயின் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதேபோல சேரனும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். கடிதங்கள், டூரிங் டாக்கீஸ், பொக்கிஷம், அன்புத் தோழி ஆகியபடங்களை வைத்துக் கொண்டு எதை முதலில் முடிப்பது என விழித்துக் கொண்டிருந்தார்.

இப்போது ஒரு வழியாக முடிவெடுத்துவிட்டார். மேற்சொன்ன படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியன் தியேட்டர்ஸ்தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்கி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு தவமாய் தவமிருந்து என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கேரள நடிகை பத்மப்ரியா நடிக்கிறார். சேரனின்இயக்கத்தில் நடிப்பதால் கோபிகா போன்று தமிழில் முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கையில், ஆர்வமாகத் தமிழ் கற்று வருகிறார்.

ஏற்கனவே மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் ஜெயராம் ஆகியோருடன் தலா ஒரு படத்தில் நடித்தவர் தான் பத்மபிரியா. இரு படங்களும்ஹிட் ஆகிவிட, இப்போது மோகன் லாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அங்கு பல வாய்ப்புக்கள் வந்தாலும் தமிழுக்கே முதலிடம் தந்துசேரனின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.

தவமாய் தவமிருந்து படத்தை முடித்து விட்டு விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார் சேரன். அடிதடிப் படங்களிலேயேதொடர்ந்து நடித்து வருவதால் ஒரு சேஞ்சுக்கு சேரன் மூலம் மென்மையான காதல் கதை ஒன்றில் நடிக்கிறார் விஜய்.

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க சேரன் முதலில் அணுகியது விஜய்யைத் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை முடித்துவிட்டு கடிதங்கள்படத்தை எடுக்கப் போகிறார். அதில் ஹீரோயினாகவோ அல்லது முக்கிய பாத்திரத்திலோ சென்னைப் பெண் சுஜாதா நடிப்பாராம்.

போலீஸ் டிரெயினிங்கில் தோற்று சேரனால் சினிமாவுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் இவர்.

இந்தப் படத்துக்கு அப்புறம் பாரதிராஜாவின் படம் ஒன்றில் கதாநாயகனாகவும் நடிக்கப் போகிறார் சேரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil