»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரியமானவளே--- ஒரு முன்னோட்டம்

சிம்ரன், விஜய்
இம் மாத இறுதியில் ரீலீசாகவுள்ள இளமையான படம். ஏற்கனவே பவித்திர பந்தம் என்கிற பெயரில் தெலுங்கில் சூப்பர் ஹிட் படமாக ஒடியபடத்தின் கதை தான் இது.

டைரக்டர் செல்வபாரதி. விஜய், நடிப்புக்காக (!) சிம்ரன், கவர்ச்சிக்காக ராதிகா செளத்ரி பங்கேற்றிருக்கிறார்கள்.

விஜய் ராதிகா செளத்ரி
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பிஸினஸ் விஷயமாக இந்தியா வருகிறார் விஜய்.

பிஸினஸ் முடிய ஒரு சில மாதங்கள் ஆகலாம் என்கிற நிலையில் தனியாகஇந்தியாவில் ஏன் இருக்கவேண்டும். பிஸினஸ் முடிந்து வெளிநாடு திரும்பும் வரை என்னுடன் வாழ ஒரு வாடகை மனைவி வேண்டும் என்கிறார்.

வறுமையில் வாடும் அழகு தேவதை சிம்ரன், வறுமை காரணமாக வாடைகைக்கு வாக்கப்படுகிறார். பழகிவிட்டார் , கைவிடமாட்டார் என்றுசற்று தெம்பாக வாழ்கிறார்.

ராதிகா செளத்ரி
பிஸினஸ் முடிந்து, வெளிநாடு போறேன் என்று விஜய் கிளம்புகிறார். அதே நேரத்தில் இத்தனை நாள் வாடைகை மனைவியாக வாழ்ந்த சிம்ரனுக்குவயிற்றில் குழந்தையையும் விட்டுச்செல்கிறார்.

சிம்ரன் இதைச்சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். ஏற்கனவே பேசியபடி பணத்தைக்கொடுத்துவிட்டு. வெளிநாட்டுக்கும் பறந்துவிடுகிறார்.

விஜய் ராதிகா செளத்ரி

வெளிநாட்டுக்கு சென்றபிறகு தான் ரத்தப்பாசம் இழுக்கிறது. திரும்பி இந்தியா வருகிறாரா? யாரைக் கைப்பிடிக்கிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil