»   »  பிரியாமணிக்கு சீயான் அட்வைஸ்

பிரியாமணிக்கு சீயான் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரனைப் போல நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிக்குமாறு பிரியாமணிக்கு விக்ரம் அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

கண்களால் கைது செய் மூலம் பாரதிராஜாவால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்ட பிரியா மணிக்கு சரியான பிரேக் கிடைக்காமல் இருந்து வந்தது. பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலத்தில் பிரியாவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் கூட ராசியில்லாத நடிகைகள் பட்டியலிலேயே அவர் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனால் விரக்தியாகிப் போன அவர் மலையாளத்திற்குப் போய் விட்டார். இந்த நிலையில்தான் வந்து சேர்ந்தான் பருத்தி வீரன். படம் ஷூட்டிங்கில் இருந்தபோதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. குறிப்பாக பிரியா மணி, கார்த்தி ஆகியோரின் நடிப்பு குறித்து செய்திகள் பரவி எப்போடா வரும் பருத்தி வீரன் என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது.

ஒரு வழியாக பருத்தி வீரன் ரிலீஸாகி, படுஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரியாமணியும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.இருந்தாலும் இன்னும் பெரிய அளவில் மார்க்கெட் சூடு பிடிக்காமல் சுணங்கிக் கிடக்கிறாராம் பிரியா. இப்போதைக்கு பத்திரிகைககளுக்குப் பேட்டி கொடுப்பதிலேயே நேரம் கழிந்து கொண்டிருக்கிறதாம். புதிதாக ஒரு படமும் வரவில்லையாம்.

ஏற்கனவே நடித்துள்ள உள்ளம் என்ற படத்தையும், பாதியில் நின்று போய் விட்ட தோட்டா படத்தையும் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் விக்ரமை எதேச்சையாக விமான நிலையத்தில் சந்தித்துள்ளார் பிரியா.

வலியக்கப் போய் ஹாய் சொல்லிய பிரியாவிடம் வாஞ்சையாக பேசினாராம் சீயான். பருத்தி வீரன் பார்த்தேன். நல்ல படம், சரியான நடிப்பு, இனிமேல் இதுபோல நடிப்புக்குத் தீனி போடும் படத்தை தேர்வு செய்து நடித்தால் உன்னை அடிச்சுக்க ஆளே இல்லை என்று ஆரம்பித்து நிறைய அட்வைஸ் செய்தாராம் சீயான்.

அவருடைய அறிவுரை பிரியாவுக்கு ரொம்ப தெம்பாகவும், இதமாகவும் இருந்ததாம். சீயான் மட்டுமல்ல, இப்போது யார் பிரியாவைப் பார்த்தாலும் இனிமேலாவது நல்ல கதையாக பார்த்து நடிம்மா என்றுதான் அட்வைஸ் செய்கிறார்களாம்.

தெத்துப் பல்லழகி பிரியாவுக்கு வாழ்க்கை கொடுத்துள்ள முத்தழகுக்கு ஒரு ஓ போடுவோமா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil