»   »  ஷாருக்கானுடன், பிரியா மணி!

ஷாருக்கானுடன், பிரியா மணி!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
 இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கப் போகிறார்களோ என்று எண்ணி விட வேண்டாம். கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் குத்து விளக்கேற்றத்தான் பிரியா மணியைக் கூப்பிட்டுள்ளனர். பட விழாவை தொடங்கி வைக்கவிருப்பவர் ஷாருக் கான்

கோவாவில் வருகிற 23ம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விழா தொடங்குகிறது. இப்பட விழாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தொடங்கி வைக்கிறார். விழாவில் குத்து விளக்கேற்றி வைக்க பிரியா மணியைக் கூப்பிட்டுள்ளனர்.

இந்த வாயப்பால் பெரும் சந்தோஷமடைந்துள்ளார் பிரியா மணி. தனது நடிப்புலக வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது என்று கூறுகிறார் பிரியா மணி.

சமீபத்தில் டெல்லியில் நடந்த 9வது ஓசியான் திரை விசிறி விருது விழாவில் பருத்தி வீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இந்த நிலையில் கோவா திரைப்பட விழாவில் குத்து விளக்கேற்றி வைக்கும் வாய்ப்பு பிரியாவைத் தேடி வந்துள்ளது. இந்த விழாவை முதலில் தொடங்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை மறுத்து விட்டார். இதையடுத்தே ஷாருக்கானுக்கு அந்த வாய்ப்பு போனது என்பது நினைவிருக்கலாம்.

குத்து விளக்கேற்றி வைக்கும் வாய்ப்பு குறித்து பிரியா மணி சந்தோஷம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஷாருக்கான் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தொடங்கி வைக்கும் ஒரு படவிழாவில் அவருடன் இணைந்து பங்கேற்பது என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது. அது பலருக்கும் கனவாகவே உள்ளது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதைப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.

மேலும், ரஜினி சார் கலந்து கொள்வதாக இருந்த ஒரு விழாவில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது கூடுதல் பெருமையாக உள்ளது என்றார் பிரியா மணி

குத்துவிளக்கேற்றி வைக்க தன்னை அழைத்த செய்தியை அறிந்ததும், பருத்தி வீரன் இயக்குநர் அமீர் உள்பட தனது நண்பர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு போன் செய்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாராம் பிரியா.

Read more about: priyamani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil