»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அது ஒரு கனாக்காலம் படத்தில் தான் நடிக்கும் கவர்ச்சிக் காட்சிகள் குறித்து பிரியாமணிக்கு ரொம்பவே சந்தோஷமாம். அதை விட பரமதிருப்தியாம். இனிமேல்தான் தான் கவனிக்கப்படப் போகிறோம் என்றும் கூறுகிறார்.

பொதுவாக பாலுமகேந்திரா படங்கள் என்றாலே கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கும். அதுவும் இப்போது தனுஷ், பிரியாமணி எனஇரண்டு இளசுகள் நடிப்பதால் அது ஒரு கனாக்காலம் படத்தை படுரொமான்டிக்காக எடுத்து வருகிறார்.

பாலுமகேந்திராவின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு பிரியாமணியும் கவர்ச்சிக் காட்சிகளில் கலக்கியுள்ளாராம்.

நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் அனுபவம் வாய்ந்த தனுஷே வெட்கப்படும் அளவுக்கு விளையாடியுள்ளாராம். இந்தக் காட்சிகள்குறித்து பிரியாமணிக்கு ரொம்பத் திருப்தியாம்.

கவர்ச்சிக் காட்சிகளாக இவற்றை நான் நினைக்கவில்லை. கதைக்கு மிகவும் பொருத்தமான, அவசியமான காட்சிகள். இதை விரசமில்லாமல்,மிகவும் அருமையாக படம் பிடித்துள்ளார் பாலுமகேந்திரா.

உண்மையில் பாரதிராஜா சாரின் கண்களால் கைது செய் படத்தில் நடித்தை விட இந்தப் படத்தில்தான் நான் கவர்ச்சிக் காட்சிகளில்அதிகமாக நடித்துள்ளேன், அதேசமயம் திருப்தியுடன் நடித்துள்ளேன்.

பாரதிராஜாவை மிஞ்சி விட்டார் பாலுமகேந்திரா சார். உண்மையில் அவர் பெரிய ஆள்தான் என்று புளகாங்கிதப்படுகிறார் பிரியாமணி.

சரி, தனுஷ் மேட்டருக்கு வருவோம். ட்ரீம்ஸ் படத்தையடுத்து தேவதையைக் கண்டேன் படமும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததில் தனுஷ்ரொம்பவே அப்செட்டாக இருக்கிறார்.

இருப்பினும் ரஜினி வீட்டுக்கு மருமகனான சந்தோஷத்திலும், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வாலுடன்நடிக்கும் ஒரு நாள் ஒரு கனவு படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலும் இந்தக் கவலையை தனுஷ் மறந்துள்ளார்.

தனுசுக்கு கல்யாணப் பரிசாக ராஜா அண்ணாமலைபுரத்தில் புது பங்களா ஒன்றை ரஜினி வழங்கியுள்ளார். ஆனால் தனது உழைப்பில்கட்டிய வீட்டிலேயே தனது மனைவியுடன் வாழ வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் தனுஷ்.

இதற்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ரூ.6 கோடி செலவில் பங்களா ஒன்றைக் கட்டி வருகிறார். விரைவில் இந்த வீட்டிற்கு தனதுமனைவி ஐஸ்வர்யாவுடன் குடியேறவிருக்கிறார்.

தற்போது தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் கஸ்தூரிராஜாவுடன் தங்கியிருக்கிறது. அண்மையில்இந்த வீட்டுக்கு ரஜினி வந்தார்.

அவருக்கு தடபுடலான விருந்து கொடுத்து தனுஷ் வீட்டார் அசத்திவிட்டார்களாம். மருமகன் மற்றும் அவரது வீட்டார் தன் மீது செலுத்தியஅக்கறையைக் கண்டு ரஜினி நெகிழ்ந்து போனாராம்.

இதற்கிடையே மேலும் இரண்டு படங்களில் நடிக்க தனுஷ் ஒத்துக் கொண்டுள்ளார்.

அது ஒரு கனாக்காலம், ஒரு நாள் ஒரு கனவு ஆகிய படங்களோடு L.O.V.E., ஏவி.எம். தயாரிப்பில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக சொல்லியிருந்தோம்.

இந் நிலையில் புதுப்பேட்டை, யுவன் ஆகிய படங்களில் நடிக்க தனுஷ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கால்ஷீட் பிரச்சினை என்று மீண்டும் கோர்ட் வாசல் ஏறாமல் இருந்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil