»   »  பிரியா ராமனுக்கு ஆண் குழந்தை

பிரியா ராமனுக்கு ஆண் குழந்தை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை பிரியா ராமனுக்கு சென்னை மருத்துவமனையில், அழகான ஆண் குழந்தை பிறந்தது.

வள்ளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளாவச் சேர்ந்த பிரியா ராமன். தமிழில் பல படங்களில் நடித்துள்ள பிரியா ராமன் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது டிவி தொடர்களைத் தயாரித்து, நடித்தும் வருகிறார்.

இவரது கணவர் நடிகர் ரஞ்சித். இருவரும் காதலித்து மணந்தவர்கள். இருவரும் சேர்ந்து இரு படங்களையும் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் பிரியா ராமன் கர்ப்பமானார்.

நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த பிரியாவுக்கு, நேற்று காலை பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துமனையில் பிரியாவை சேர்ந்தனர். அங்கு மாலையில் பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இது சுகப் பிரசவம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மகன் பிறந்த செய்தியைக் கேட்டதும் ரஞ்சித் விரைந்து வந்து மனைவியையும், மகனையும் பார்த்து மகிழ்ந்தார்.

ரஞ்சித் தற்போது டான் சேரா, பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil