twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தினமும் 250 உதவி இயக்குனர்களுக்கு உணவளிக்கும் தயாரிப்பாளர் பெப்சி சிவா! மளிகை வழங்கும் இயக்குனர்!

    By
    |

    சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உதவி இயக்குனர்கள் சுமார் 250 பேருக்கு தயாரிப்பாளர் பெப்சி சிவா, தினமும் உணவளித்து வருகிறார்.

    உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா. சீனாவின் வூஹானில் உருவான இந்த வைரஸ், பல்வேறு நாடுகளுக்கு பரவிவிட்டது.

    இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும்பாதிப்பை சந்தித்துள்ளன.

    உங்க சைஸுக்கு டிரெஸ் கிடைக்கலையா.. குட்டி உடையில் சுற்றும் சாக்‌ஷி.. விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!உங்க சைஸுக்கு டிரெஸ் கிடைக்கலையா.. குட்டி உடையில் சுற்றும் சாக்‌ஷி.. விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

    உயிர்க் கொள்ளி

    உயிர்க் கொள்ளி

    அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இருந்தும் இந்த உயிர்க்கொள்ளி தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இந்தியாவில் பாதிப்பு

    இந்தியாவில் பாதிப்பு

    இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை விட நம் நாட்டில் பாதிப்பு குறைவுதான் என்றாலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது.

    படப்பிடிப்பு ரத்து

    படப்பிடிப்பு ரத்து

    பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடைப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் தங்களில் வீடுகளில் இருக்கின்றனர். தினசரி ஊதியம் வாங்கும் சினிமா தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் சிக்கிக்கொண்ட உதவி இயக்குனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெப்சி சிவா

    பெப்சி சிவா

    இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இயக்குனர் கரு. பழனியப்பன் தினசரி உணவு வழக்கும் விதமாக ரூ.50 ஆயிரம் கொடுத்து தொடங்கி வைத்தார். மேலும் சில இயக்குனர்களும் உதவி செய்தனர். இப்போது தயாரிப்பாளர் பெப்சி சிவா இதை கையில் எடுத்துக்கொண்டார். தினமும் சுமார் 250 உதவி இயக்குனர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

    உதவ வேண்டும்

    உதவ வேண்டும்

    இதுபற்றி அவரிடம் கேட்டபோது, 'சினிமா இப்படி ஒரு பாதிப்பை சந்திக்கும் என்று யாருக்கும் தெரியாது. நான் பெரிய தயாரிப்பாளரும் இல்லை. கஷ்டப்படும் நேரத்தில் உதவ வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தினமும் மதிய உணவு வழங்கி வருகிறேன். இதற்காக தினமும் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவு வழங்குகிறோம். அன்று ரூ.25 ஆயிரம் வரை செலவாகும்.

    சொந்த செலவில்

    சொந்த செலவில்

    சங்கம் அவர்களுக்குக் கொடுக்கிற உதவி தொகை அவர்களுக்குப் போதாது. என்னால் முடிந்த அளவு, சொந்த செலவில் இதை செய்து வருகிறேன்' என்றார். பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவரான சிவா, இப்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடித்துள்ளனர். பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார்.

    மளிகை பொருட்கள்

    மளிகை பொருட்கள்

    உதவி இயக்குனர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் ராஜா கார்த்தி செய்து வருகிறார். அவரிடம் கேட்டபோது, ' என்னோடு அசோக், ரேணுகோபால், வேல்முருகன், ரமணி, பாக்யராஜா ஆகியோரை கொண்ட டீம் இதை செய்து வருகிறோம். பிக்பஜார் எதிரில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் மதியம் உணவு வழங்குகிறோம். நெசப்பாக்கத்திலும் சிலருக்கு வழங்குகிறோம்.

    அனைவருக்கும் உணவு

    அனைவருக்கும் உணவு

    உணவுக்கானச் செலவைத் தயாரிப்பாளர் சிவா கொடுக்கிறார். நான் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வாங்கி, உதவி இயக்குனர்கள் குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கி கொடுக்கிறேன். அவர்களின் போன் ரீஜார்ஜ் செய்துகொடுக்கிறேன். உதவி இயக்குனர்களிடம் ஐடி கார்டு இருக்கிறதா என்பதை எல்லாம் பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. அப்படி கேட்பது அவர்கள் மனதை புண்படுத்தும் என்பதால், வருகிற அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறோம் என்கிறார். இவர்களின் இந்த மனிதாபிமான சேவையை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Producer Fefsi Siva Provides food To 250 assistant directors daily
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X