Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மாஸ்டர் படம் இந்த ஒரு விஷயத்தை தவறாக காட்டிவிட்டது.. லோகேஷ் கனகராஜை சீண்டிய பிரபல தயாரிப்பாளர்!
சென்னை: விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு விஷயம் தவறாக காட்டப்பட்டுவிட்டதாக பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் சாடியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் கே ராஜன். பல படங்களை தயாரித்துள்ளார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். முன்னணி நடிகர் நடிகைகள் குறித்தும் தடாலடியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
நயன்தாராவுக்கு
வில்லனாகும்
பிரபல
தமிழ்
நடிகர்!

மீ டூ விவகாரம் - சின்மயிக்கு மிரட்டல்
கடந்த 2001ஆம் ஆண்டு தயாரிப்பாளர் கொத்தண்ட ராமையாவை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு எட்டுத்திக்கும் பற படத்தின் ஆடியோ லாஞ்சில் பாடகி சின்மயியை, வைரமுத்து விவகாரம் தொடர்பாக மேடையிலேயே மிரட்டி பேசினார்.

இயக்குநர்களை விளாசிய கே ராஜன்
இதேபோல் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் மற்றும் இயக்குநர்கள் செல்வராகவன் மற்றும் கவுதம் மேனனையும் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்காக விமர்சித்து பேசினார்.

நயன்தாரா குறித்து விமர்சனம்
நடிகை நயன்தாரா அதிக சம்பளம் பெறுவதாக கூறி அவரை விமர்சித்தார். தயாரிப்பாளர் கே ராஜன், நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். உளவுத்துறை, என் சகியே, கபடி கபடி, ஆதிக்கம், சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, உணர்ச்சிகள், பகிரி, பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

த்ரிஷா திமிர் பிடித்தவர்
தயாரிப்பாளர் கே ராஜன் அண்மையில் நடிகை த்ரிஷா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என கூறி விமர்சித்தார். மேலும் நடிகை த்ரிஷா திமிர் பிடித்தவர் என்றும், நடிப்பு திறனை வளர்த்துக்கொள்ளாத த்ரிஷா, சம்பளத்தை மட்டும் உயர்த்திக்கொண்டே போவதாகவும் சாடினார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திட்டமிடலுடன் கையாள்கிறார்
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் லோகேஷ் கனகராஜையும் சீண்டியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசியுள்ள தயாரிப்பாளர் கே ராஜன், கைதி படத்தின் இயக்குனர் நல்ல அருமையாக திட்டமிடலுடன் படங்களை கையாள்கிறார் என்று முதலில் பாராட்டி பேசியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் பிடிக்காத விஷயம்
தொடர்ந்து பேசிய அவர் மாஸ்டர் படமும் நல்ல படம் தான் என்ற அவர் அதில் தனக்கு பிடிக்காத ஒரே விஷயம் ஒரு கல்லூரி ஆசிரியராக இருக்கும் விஜய் குடித்து விட்டு வருவது போன்ற காட்சிகள் தான் என்றார். மாணவர்களுக்கு எல்லாம் பிடித்த ஆசிரியர் மாணவர்களுக்கு நல்வழியை கற்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
Recommended Video

18 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினேன்
படத்தில் வேறு எந்த குறைகளும் இல்லை தனக்கு தோன்றியதை தான் கூறினேன். காரணம் நான் 18ஆண்டுகள் வரை தான் ஒரு ஆசிரியராக பனியாற்றியவன் என்றும் கூறினார் தயாரிப்பாளர் கே ராஜன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தனர்.

கமலை இயக்கும் லோகேஷ்
மாஸ்டர் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்து சாதனை படைத்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.