»   »  'மிருகம்' தயாரிப்பாளர் உண்ணாவிரதம்!

'மிருகம்' தயாரிப்பாளர் உண்ணாவிரதம்!

Subscribe to Oneindia Tamil
Padmapriya with Adhi
மிருகம் படத்தில் இடம் பெற்றிருந்த ஜல்லிக்கட்டு காட்சியை நீக்கியதைக் கண்டித்து மிருகம் பட தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கிறார்.

இயக்குநர் சாமியின் இயக்கத்தில், பத்மப்ரியா, சோனா, புதுமுகம் ஆதியின் நடிப்பில் உருவாகியுள்ள மிருகம் படம் சமீபத்தில் ரிலீஸானது. நல்ல வரவேற்புடன் தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

முன்னதாக இப்படத்ைத தணிக்கைக்காக அனுப்பியபோது படத்தில் இடம் பெற்றிருந்த ஜல்லிக்கட்டு காட்சிக்கு பிராணிகள் நல வாரியம் ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து அந்தக் காட்சி நீக்கப்பட்டது.

ஆனால் இதற்கு மிருகம் பட தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய் கடும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.

காளை மாடுகளை எந்தவிதத்திலும் சித்திரவதை செய்யாமல் காட்சியைப் படமாக்கியதாக கூறியம் அந்தக் காட்சியை தணிக்கை வாரியம் எடுத்து விட்டதற்கு அதிருப்தி தெரிவித்த அவர் இதைக் கண்டித்து பிராணிகள் நல வாரியத்தை நோக்கி கோவணத்துடன், ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் ஊர்வலமாகப் போகப் போவதாக அறிவித்தார்.

இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மாடுகளுடன் பேரணி என்ற போராட்டத்ைத உண்ணாவிரதமாக கார்த்திக் ஜெய் மாற்றியுள்ளார்.

நாளை காலை 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே கார்த்திக் ஜெய் உண்ணாவிரதம் இருக்கிறார். மாலை வரை இந்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் 500க்கும் மேற்பட்டோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil