»   »  தெலுங்கில் டரியல் புலிகேசி!!

தெலுங்கில் டரியல் புலிகேசி!!

Subscribe to Oneindia Tamil

தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இம்சை அரசன் 23ம் புலிகேசி இப்போது தெலுங்கு ரசிகர்களையும் திகட்டத் திகட்ட நகைக்க வைக்க தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது.

ஷங்கர் மெகா பட்ஜெட்டில் தயாரித்த முதல் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. வடிவேலுவின் அலப்பறை நடிப்பிலும், காமெமடியாலும் படம் படு ஓட்டம் ஓடியது.

இப்போதுது மணவாடுகளின் மனம் குளிர வைக்கு புலிகேசி தெலுங்கிலும் பேசி பிளிறப் போகிறார். தயாரிப்பாளர் என்.வி.பிரசாத், இம்சை அரசனை தெலுங்கில் டப் செய்துள்ளார்.

இப்படத்தை முதலில் ரீமேக் செய்யலாமா என யோசித்துள்ளார் பிரசாத். ஆனால் படத்தில் வடிவேலுவின் கேரக்டரையும், அவரது நடிப்பையும் பார்த்து அரண்டு போன பிரசாத், வடிவேலுவுக்கு இணையான நடிகர் யாருமே தெலுங்கில் இல்லையே என்று கலங்கி டப்பிங் முடிவுக்கு வந்தாராம்.

மேலும் சந்திரமுகி தெலுங்கில் வெளியானதால் வடிவேலுவுக்கு ஏற்கனவே தெலுங்கில் கணிசமான ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். எனவே படத்தை டப்பிங் செய்து வெளியிட்டால் நல்லதாக இருக்கும் என்பதும் பிரசாத்தின் டப்பிங் முடிவுக்குக் காரணமாம்.

தெலங்குப் படத்துக்கு இம்சராஜு 23வது புலிகேசி என பெயர் வைத்துள்ளனராம்.

இம்சை அரசன் படத்தை கர்நாடகத்தில் வெளியிடக் கூடாது என்று அந்த ஊரில் ஏற்கனவே தடை விதித்தது நினைவிருக்கலாம்.

கன்னட மன்னை புலிகேசியை இழிவு செய்வது போல படம் எடுத்து விட்டார்கள் என்று கன்னடத் திரையுலகினர் அதற்குக் காரணம் கூறினார்கள். இதனால் கர்நாடக மக்களால் இம்சை அரசனை ரசிக்க முடியாமல் போய் விட்டது.

தெலுங்கு ரசிகர்களும் டரியல் ஆகட்டும்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil