»   »  யுடிவியுடன் இணையும் ராதிகா!

யுடிவியுடன் இணையும் ராதிகா!

Subscribe to Oneindia Tamil

யுடிவி நிறுவனத்துடன் ராதிகா சரத்குமாரின் ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் இணைந்து ஆண்டுக்கு நான்கு இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களைத் தயாரிக்கும்.

ராதிகாவின் நிறுவனமான ராடான், ஆரம்பத்தில் டிவி சீரியல்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டும் தயாரித்து வந்தது. ஆனால் பின்னர் திரைப்படத் தயாரிப்பிலும் குதித்தார் ராதிகா.

இந்த நிலையில் ராடான் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் பொருட்டு, யுடிவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார் ராதிகா. அதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து ஆண்டுக்கு நான்கு படங்களைக் தயாரிக்கும். இந்தி மற்றும் பிற தென்னிந்திய மொழிப் படங்களை இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டாக தயாரிக்கும்.

இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள முதல் படைப்பு கண்ணாமூச்சி ஏனடா. பிருத்விராஜ், சந்தியா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் ராதிகாவும், சத்யராஜும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோடி சேர்ந்துள்ளனர்.

அடுத்து சரத்குமார் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றைத் ராடானும், யுடிவியும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

இதுதவிர கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய தமிழ்ப் படம் தயாரிக்கும் திட்டமும் உள்ளதாம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றி வாகை சூடிய 7 ஜி ரெயின்போ காலனியின் இந்தி ரீமேக்கையும் ராடான், யுடிவி இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்தி ரீமேக்கையும் செல்வராகவனே இயக்கவுள்ளார்.

யுடிவி நிறுவனம் உலக அளவில் நல்ல ஆளுமையில் உள்ள பிரபல நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் முக்கியமானது வால்ட் டிஸ்னி நிறுவனம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் இந்த நிறுவனத்திற்கு அலுவலகம் உள்ளது.

அவ்வப்போது படங்கள் தயாரித்து வந்த ராடான் நிறுவனம் இனி யுடிவியுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் படத் தயாரிப்பில் ஈடுபடும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil