»   »  தலைவி ஆனார் ராதிகா!

தலைவி ஆனார் ராதிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய சின்னத் திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகை ராதிகா தேர்வாகியுள்ளார். குட்டி பத்மினி துணைத் தலைவராகியுள்ளார்.

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு சென்னையில் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ராதிகா, ஒருமனதாக, போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு நடிகை குட்டி பத்மனி, ஜே.கிருஷ்ணசாமியும் செயலாளராக டி.வி.சங்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்வான நிர்வாகிகள் இன்னும் 2 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார்கள்.

புதிதாக தேர்வான நிர்வாகிகளுக்கு முன்னாள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil