»   »  காதலரை மணந்தார் நடிகை ராதிகாவின் மகள் ரயான்... சசிகலா, விக்ரம் உள்பட பலர் வாழ்த்து!

காதலரை மணந்தார் நடிகை ராதிகாவின் மகள் ரயான்... சசிகலா, விக்ரம் உள்பட பலர் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயானுக்கும், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் மகாபலிபுரத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயானுக்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

[ரயான்-அபிமன்யு மிதுன் திருமணம்: படங்கள்]

இதையடுத்து இன்று மகாபலிபுரத்தில் அவர்களின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

சசிகலா

சசிகலா

சரத்குமாரின் மகளை வாழ்த்த முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் அவரது நெருங்கிய தோழி சசிகலா திருமணத்திற்கு வந்திருந்தார். அவர் அம்மா சார்பில் மணமக்களை வாழ்த்தினார்.

விக்ரம்

விக்ரம்

ரயான், மிதுன் தம்பதியை சீயான் விக்ரம் நேரில் வந்து வாழ்த்தினார்.

பாரதிராஜா

பாரதிராஜா


மகளின் திருமணத்தன்று சரத்குமார் பட்டு வேட்டி சட்டை அணிந்து தாடியுடன் காணப்பட்டார். இயக்குனர் பாரதிராஜா நேரில் வந்து மணமக்களை
வாழ்த்தினார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

தெலுங்கு நடிகரும், ராதிகா சரத்குமாரின் நெருங்கிய நண்பருமான சிரஞ்சீவி ஹைதராபாத்தில் இருந்து திருமணத்திற்கு வந்திருந்தார்.

பிரபு

பிரபு

ராதிகா, சரத்குமார் ஆகியோரின் நண்பரான பிரபு ரயானின் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

சுஹாசினி

சுஹாசினி

நடிகையும், ராதிகாவின் நெருங்கிய தோழியுமான சுஹாசினி தனது கணவரும், இயக்குனருமான மணிரத்னத்துடன் திருமணத்திற்கு வந்திருந்தார்.

ராதிகா

ராதிகா

ராதிகா தனது மகளின் திருமணத்தன்று ஃபுல்மேக்கப்பில் அழகாக இருந்தார். பார்ப்பதற்கு ரயானின் அக்கா போன்று இருந்தார்.

பாக்யராஜ்

பாக்யராஜ்

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் வந்து ரயான், அபிமன்யுவை வாழ்த்தினார்.

English summary
Rayane, daughter of actress Radhika Sarathkumar has married her cricketer boyfriend Abhimanyu Mithun on sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil