»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர் படத்தைத் தான் ஒரேயடியாக நம்பி இருக்கிறார் ராதிகா செளத்ரி. சான்ஸ் இல்லாமல் மும்பையிலேயேகுடியேறிவிட்ட இவர், அங்கிருந்து தயாரிப்பாளர்களுக்கு போன் மேல் போன் போட்ட பலனாகத் தான் இந்தவாய்ப்புக் கிடைத்தது.

இதில் சங்கவிக்கும் இவருக்கும் இடையே நடந்து வரும் கவர்ச்சிப் போட்டி கோடம்பாக்கத்தை குலைநடுங்கவைக்கிறதாம். இருவரும் அந்த அளவுக்கு மனம் திறந்து நடித்து வருகின்றனராம்.

இதில் ராதிகாவுக்குதயாரிப்பாளர் ஆசி இருப்பதால் கூடுதல் சீன்கள் அமைந்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் இன்னொரு ரவுண்டு வந்துவிடலாம் என்ற பெரும் நம்பிக்கையில்இருக்கிறாராம் ராதிகா செளத்ரி.

பிரசாந்த் நடித்து ராாாாாாாாெ...ம்ப நாட்களாய் எடுக்கப்பட்டு வந்த ஜெய் படம் ஊத்தி மூடப்பட்டுவிட்டது.படத்துக்கு பைனான்ஸ் பிரச்சனையாம்.

தயாரிப்பாளர் அங்கே, இங்கே வாங்கி இழுத்துப் பார்த்தார் முடியவில்லை.கடைசியில் படத்தையே கை கழுவிட்டு கிளம்பிப் போய்விட்டார்.

சொந்த காசைப் போட்டு எப்படியாவதுபடத்தைத் தேற்றிவிட பிரசாந்த் விரும்பினார். ஆனால், அப்பா தியாராஜன் அதைத் தடுத்துவிட்டார்.

படத்துல நடி, சம்பாத்தியம் பண்ணு. மறுபடியும் சினிமாவுல மட்டும் காசைப் போடதே. இது தந்தையின்அட்வைஸ்.

தெலுங்கில் எந்த சான்ஸ் வந்தாலும் அதை சிம்ரன் விடுவதே இல்லை. கன்னடத் தயாரிப்பாளரிடம் எனக்குத்திருமணம் என்று சொல்லி அட்வான்ஸைத் திருப்பித் தந்தவர், தெலுங்குப் படங்களுக்கு மட்டும் இன்று வரைகையை நீட்டி அட்வான்ஸை வாங்கி வருகிறார். காரணம் அங்கு கிடைக்கும் பெரும் பணம் தான்.

கன்னடத்தில் ஒரு படத்துக்கு வாங்கும் காசை, தெலுங்கில் ஒரே பாட்டுக்கு ஆடி வாங்கி விடுகிறார் சிம்ரன்.

ராகவேந்திரா என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடி வரும் சிம்ரன் அடுத்ததாக சிந்தாத்ரி என்ற படத்துக்காக ஒருபாட்டுக்கு துட்டு வாங்கியுள்ளார்.

ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட இவருக்கு சம்பளம் ரூ. 20 லட்சமாம். ஆடுங்கம்மாஆடுங்க..

விஜய்யின் கீதை படத்தின் பெயர் மாற்றப்பட்டுவிட்டது. படத்தின் தலைப்புக்கு சங் பரிவாரங்களுடன் சேர்ந்துசென்சார் போர்டும் அரிவாளைத் தூக்க தலைப்பை புதிய கீதை என மாற்றிவிட்டனர். ஆனால், ஏற்கனவேவந்துவிட்ட ஆடியோ கேசட்களில் பெயர் கீதை தானாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil