»   »  கஸ்தூரி ராஜாவும், ரகசியாவும்

கஸ்தூரி ராஜாவும், ரகசியாவும்

Posted By:
Subscribe to Oneindia Tamil


மறுபடியும் ஒரு காமம் கலந்த காதல் கதையுடன் படம் எடுக்கக் கிளம்பி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சம்பந்தியான கஸ்தூரி ராஜா.

ஒரு காலத்தில் கிராமத்துப் படங்களாக எடுத்துக் கலக்கியவர் கஸ்தூரி ராஜா. பின்னாளில் அவரது ஒரு மகன் இயக்குநராகவும், இன்னொருவர் நடிகராகவும் மாறிய பின்னர் இயக்கத்தைக் குறைத்துக் கொண்டார் கஸ்தூரி.

சமீபத்தில் ஒரு காதல் வரும் பருவம் என்ற படத்தை எடுத்து சமூகத்தின் சகல தரப்பினரின் வசவையும் வாங்கிக் கட்டிக் கொண்டார். படமா அல்லது பலான படமா என்று கேட்கும் அளவுக்கு பாடம் முழுக் காம ரசம் சொட்டியது அப்படத்தில்.

இதையடுத்து வீட்டினரே கூட அவரை கடுமையாக எச்சரித்தனராம். இதுபோல இனிமேல் படம் எடுக்க வேண்டாம்.

ஆனாலும் இத்தனை நாட்களாக அமைதி காத்த கஸ்தூரி ராஜா மறுபடியும் ஒரு காதல் பிளஸ் காமம் கலந்த படத்தை எடுக்கக் கிளம்பி விட்டார்.

காதலுக்கும், காமத்திற்கும் இடைவெளி ஒரு நூலிழைதான் என்பார்கள் பொதுவாக. அந்த நூலிழை எது என்பதை தனது படத்தில் விளக்கப் போகிறாராம் கஸ்தூரி. இதிலிருந்தே படம் முழுக்க என்ன மாதிரியான காட்சிகள் இருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.

கஸ்தூரியின் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறவர் கசமுச ரகசியா. துண்டுத் துணியுடன் தைய தக்கா என ஆடிப் பாடி, இளைஞர்களை அணல் பறக்க வைக்கும் ரகஸ்யா, இப்படத்தில் முழு நீள கவர்ச்சியில் பின்னி எடுக்கப் போகிறாராம்.

மாமனார் இறை பக்தியில் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறார். மறுபக்கம் சம்பந்தியோ, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இடையிலான இடைவெளி நூலிழை அளவு அல்ல, பெரிய நூல் கண்டு அளவுக்கு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.

Read more about: kasturiraja ragasiya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil