»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரகஸ்யா வர வர இயக்குனர்களின் வேலையை ரொம்பவே மிச்சப்படுத்துகிறாராம்.

அதாவது இயக்கத்தில் அவர் தலையிடுவதாக எண்ணி விட வேண்டாம். ஆடைக் குறைப்பில் தான் அவர் அதிக அக்கறைகாட்டுகிறார்.

இயக்குனர்களுக்கு இந்த விஷயத்தில் எந்தச் சிரமமும் வைப்பதே இல்லை ரகஸ்யா.

வசூல் ராஜாவில் ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்கு ஏகப்பட்டவாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய் விட்டன.

இதனால் ரகஸ்யா மீது பல குஜிலிகள் கடுப்பில் இருப்பது தனிக்கதை. சமீபத்தில் நட்சத்திர ஹோட்டலில் வைத்து சங்கவியும்,கிரணும் இடி இடியென இடித்துத் தள்ளி ரகளை செய்ததை ஏற்கனவே சொல்லியுள்ளோம்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்புடன் எங்கேயுமே வந்து போகிறார் ரகஸ்யா. கூடவே எப்போதும் 4 பேர் கொண்ட அடியாள்பட்டாளமும் வருகிறது.

சமீபத்தில் தாஸ் படத்திற்காக அவர் ஒரு குத்து குத்தினார். அதில் அவருக்குக் கொடுக்கப்பட்ட காஸ்ட்யூமைப் பார்த்த அவர்,என்னது இது "நெறய துணி" இருக்கு என்று கூறியபடியே அதில் சில கரெக்ஷனைக் கூறியுள்ளார்.

குறிப்பாக தொப்புள் பகுதி பளிச்சென தெரியும் வகையில் பெரிய ஓட்டையைப் போடுமாறு கூறி காஸ்ட்யூம் டிசைனருக்குஅட்வைஸ் கொடுத்துள்ளார்.

ரகஸ்யா கூறியபடி ஓட்டையைப் போட்டும், சைடில் கிழித்து விட்டும் அந்த உடையைக் கொண்டு வந்து கொடுத்தாராம் காஸ்ட்யூம்டிசைனர்.

அப்போது இயக்குனர் தலையிட்டு, எதுக்கு இவ்வளவு பெரிய ஓட்ட என்று கேட்க, அப்பத்தான் என்னோட கவர்ச்சி நல்லா கவர்ஆகும் வியாக்கியானம் சொன்ன ரகஸ்யா அதை அணிந்து காட்டினாராம்.

டிரஸ்ஸில் போடப்பட்ட அந்த பெரிய கேட் வழியாகரகஸ்யாவின் "மத்திய பிரதேசம்" பிரமாண்டமாகத் தெரிந்ததாம். அடடாஇது நமக்குத் தோணாம போச்சே என்று ரகஸ்யாவின் காஸ்ட்யூம் டிசைனிங் திறமை குறித்து இயக்குனர் ஆச்சரியப்பட்டாராம்.

இப்படி டிரஸ் போட்டாத்தானே அது ரகஸ்யா, என்று தனக்குத் தானே முதுகில் தட்டிக் கொடுத்தபடி அந்த டிரஸ்ஸில் ஆடிமுடித்தாராம்.

மதுரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தாஸ் படத்தின் ஹீரோயின் ரேணுகா மேனன் உண்மையிலேயே ஒருகாஸ்ட்யூம் டிசைனர் என்பது உங்களுக்குத் தெரியுமோ?. சினிமாவுக்கு வரும் முன் திருவனந்தபுரத்தில் ஒரு ஆடை வடிவமைப்புநிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வந்திருக்கிறார்.

ஆனா, ரகஸ்யா அளவுக்கு ரேணுகாவுக்கு ஆடை வடிவமைப்பு தெரியுமா என்று தெரியவில்லை.

இப்போது ஒரு பாட்டுக்கு ஆட ரகஸ்யா கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 12 லட்சம். இது தமிழில் தான். தெலுங்கில் ரூ.15 லட்சம் கேட்கும் இவரது இந்தி சம்பளம் ரூ. 25 லட்சமாம்.

இதைத் தவிர ரகஸ்யாவுடன் கூடவே வரும் 4 அடியாள் பட்டாளத்துக்கும் தயாரிப்பாளர் தான் ரூம், தண்ணி, சாப்பாடு சப்ளைசெய்ய வேண்டுமாம். இந்த பில்லே ஒரு நாளைக்கு பல ஆயிரங்கள் வருகிறதாம்.

ரகஸ்யாவின் கால்ஷீட் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் கவனிக்கிறார் ஒருவர். அவர் தான் ரகஸ்யாவுக்கு மேனேஜர், அவர்தான் டிரைவர், அவர் தான் காதலரும் கூட.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil