»   »  கலாம் வேடத்தில் ரகுவரன்

கலாம் வேடத்தில் ரகுவரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடக்கம் என்ற படத்தில் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கவுள்ளாராம் ரகுவரன்.

நாடு முழுவதும் ஆறிலிருந்து 60 வயது வரையிலான அனைத்துத் தரப்பினரின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் இப்போதைக்கு அப்துல் கலாம் மட்டுமே. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்பது போல, சூப்பர் பிரசிடென்ட் யாருன்னு கேட்டா கலாம் என்று டணால் என்று அத்தனை பேரும் சொல்வார்கள்.


அந்த அளவுக்கு அத்தனை பேரின் அன்புக்குரியவராகவும் திகழ்கிறார் கலாம். இப்போது கலாமை மையமாக வைத்து ஒரு படத்தில் கேரக்டரை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெயர் தொடக்கம்.

தொடக்கம் படத்தில் ரகுவரன், கலாம் வேடத்தில் வருகிறாராம். இந்தக் கேரக்டரை உருவாக்குவதில் இயக்குநர் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டுள்ளாராம். கலாம் ஹேர் ஸ்டைல் உள்ளிட்ட அவருக்கே உரிய ஸ்பெஷல் அம்சங்களை ரகுவரன் மீது புகுத்துவதிலும் படு கவனமாக உள்ளார்களாம்.

இளம் தீவிரவாதிகள் குறித்த சப்ஜெக்ட்டாம் இது. தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை கலாம் கேரக்டர் மூலமாக சொல்லவுள்ளார்களாம். அது நிச்சயம் மக்களிடம் நன்றாக ரீச் ஆகும் என்ற நம்பிக்கையால்தான் கலாம் கேரக்டரை உருவாக்க முடிவு செய்தார்களாம்.

கலாம் கேரக்டரில் நடிப்பது குறித்து ரகுவரன் கூறுகையில், இது சாதாரண விஷயமல்ல. மிக மிக கவனமாக இருக்க வேண்டிய விஷயம். ஆனால் எனது நடிப்பு மீது நம்பிக்கை உள்ளதால் தைரியமாக உள்ளேன். இது எனக்குக் கிடைத்த பெருமைக்குரிய கேரக்டர். எனது திரையுலக வாழ்க்கையில் இப்படிப்பட்ட கேரக்டரில் நடிப்பதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன், பெருமைப்படுகிறேன் என்றார் நெகிழ்ந்தவராக.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil