»   »  சாதனையாளர் ரஹ்மான்

சாதனையாளர் ரஹ்மான்

Subscribe to Oneindia Tamil

2007ம் ஆண்டுக்கான லிம்கா சாதனையாளர் விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

உலக அளவில் யாரும் செய்திராத சாதனைகைளச் செய்வோருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் வழங்கப்படுகிறது. அதேபோல இந்திய அளவில் சாதனை புரிவோருக்கு லிம்கா சாதனைப் புத்தகத்தில் பெயர் இடம் பெற்று கெளரவிக்கப்படுகிறது.

இதேபோல ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதைன படைப்போருக்கு பீப்புள் ஆப் தி இயர் (சாதனையாளர்) விருதையும் லிம்கா புத்தக நிறுவனம் வழங்கி வருகிறது.

2007ம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இசைமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல இருதய மருத்துவர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, பார்வையற்றோர் நலனுக்காக பாடுபடும் ஜார்ஜ் ஆப்ரகாம், உலக குத்துச் சண்டைப் போட்டியில் மூன்று முறை பட்டம் வென்ற முதல் பெண்மணியான மேரிகோம் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது 18வது லிம்கா சாதனையாளர் புத்தகமும் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு இந்திய சாதனையாளர்களின் சாதனைகள் இடம் பெற்றுள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil