»   »  லேப்டாப்பை தொலைத்த ரஹ்மான்!!

லேப்டாப்பை தொலைத்த ரஹ்மான்!!

Subscribe to Oneindia Tamil

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பல்வேறு இசைக் குறிப்புகள் அடங்கிய தனது லேப்டாப் கம்ப்யூட்டரை லண்டன் விமான நிலையத்தில் தொலைத்து விட்டார்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு சில நேரடி இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கனடாவில் அவரது இசை நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனுக்கு திரும்பினார் ரஹ்மான். அங்கு அவரது லார்ட் ஆப் தி ரிங்ஸ் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக லண்டன் வந்த அவர் ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்கியபோது, அவரது பை ஒன்று காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. அதில்தான் அவரு லேப்டாப் கம்ப்யூட்டர் இருந்தது.

பை காணாமல் போனது குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார் ரஹ்மான். இருப்பினும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் பெரும் வருத்தமுற்றார் ரஹ்மான்.

லேப்டாப் கம்ப்யூட்டருடன் லார் ஆப் தி ரிங்ஸ் நிகழ்ச்சியில் அணிவதற்காக கொண்டு வந்திருந்த ஆடைகளும் அந்தப் பையில் இருந்ததாம்.

இந்த சம்பவம் ரஹ்மானை வெகுவாக பாதித்துள்ளது. அவரது எதிர்வரும் நிகழ்ச்சிகள் தொடர்பான பல முக்கிய இசைக் குறிப்புகள் அந்த லேப்டாப்பில்தான் இருக்கிறதாம். இனால் கடும் ஏமாற்றமடைந்துள்ளார் ரஹ்மான்.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், இது மிகப் பெரிய ஏமாற்றமாக உள்ளது. நான் மிகவும் வருத்தமாகவும், அதிர்ச்சியுடனும் உள்ளேன். எனது இசைக் குறிப்புகள் அத்தனையும் அதில்தான் உள்ளன.

எனது வாழ்க்கையில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை. இதுகுறித்து லண்டன் போலீஸில் புகார் கொடுத்துள்ளேன். மீண்டும் அவை திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்றார்.

யாராச்சும் பையைப் பார்த்தா கொண்டு வந்து கொடுத்திடுங்கப்பா!

Please Wait while comments are loading...