»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானைசந்தித்துப் பேசினார்.

தனது சுற்றுலாவின் ஒரு பகுதியாக மும்பை வந்திருந்த சார்லஸ், இந்தித் திரையுலக பிரபலங்களையும் சந்தித்திதார்.

அமீர்கான் நடிக்கும் மங்கல் பாண்டே என்ற படத்தையும் கிளாப் அடித்துத் துவக்கி வைத்தார். 1857 ம் ஆண்டுநடந்த சிப்பாய்க் கலகத்தை மையமாகக் கொண்ட படம் இது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியசிப்பாய்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போர் அது. பிரிட்டனுக்கு எதிரான இந்தப் படத்தை கிளாப் அடித்து சார்லஸ்துவக்கி வைத்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.

அடுத்து அமீர்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் உரையாடிய சார்லஸ், பின்னர் ஏ.ஆர். ரஹ்மானையும்சந்தித்துப் பேசினார். பாம்பே ட்ரீம்ஸ் மேடை நாடகத்தின் இசை பிரிட்டனில் சக்கை போடு போட்டதைநினைவுபடுத்தி அதற்காக ரஹ்மானுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் பிரின்ஸ்.

ரஹ்மானின் அடுத்த ஹாலிவுட் பட திட்டங்களையும் ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டார் சார்லஸ்.

Please Wait while comments are loading...