twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    300 காஸ்ட்யூம்களில் 11 இசை நிகழ்ச்சிகள்... அமெரிக்காவில் ரஹ்மானின் கலக்கல் பயணம்!

    By Chakra
    |

    A R Rahman
    நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் 11 இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

    இந்த நிகழ்ச்சிகளுக்கென்றே ஸ்பெஷலாக ரஹ்மானுக்கு 300 விதமான காஸ்ட்யூம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சியைப் பார்க்க அதிகமான டிக்கெட் விலையை நிர்ணயித்த போதிலும் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

    வருகிற 11ம் தேதி முதல் அமெரிக்கா- ஐரோப்பாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை ரஹ்மான் நடத்துகிறார்.

    நியுயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜுலை 5ம் தேதி வரையிலும் 11 இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அதன் பிறகு ஐரோப்பிய நாடுகளிலும் ஜுலை 25ம் தேதி அன்று லண்டனிலும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாரீஸ் நகரில் ஜுலை 17ம் தேதி அன்று அவருடைய இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள அரங்குகள் அனைத்துமே மிகவும் பிரபலமானவை.

    முதல் நாளான 11ம் தேதி அன்று நிகழ்ச்சி நடைபெறும் நியுயார்க்கில் அமைந்துள்ள நாசவ் கொலிசியம் என்ற அரங்கில்தான் பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனா மற்றும் பிங் பிலோயட் போன்ற பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடந்தன.

    ஜாக்ஸன் ஸ்டைலில்...

    அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தும்போது காஸ்ட்யூம் மிகவும் முக்கியமானது. எனவே மைக்கேல் ஜாக்சனைப் போலவே கலக்கலான 'பள பள' உடையணிந்து மேடையில் தோன்ற இருக்கிறார் ரஹ்மான்.

    எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய குழுவை சேர்ந்த பாடகர்கள், டான்சர்கள் அனைவருக்கும் 300 விதமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடர் நிறத்தில் பளபள ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இதுபோன்ற ஆடைகளுடன் அவர் இசை நிகழ்ச்சி நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    புகழ்பெற்ற கிராமி விருதுகள் விழாவுக்கு ஆடைகளை வடிவமைத்து தரும் சர்வதேச ஆடை வடிவமைப்பாளரான ரீது பெரி பெண், இந் நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுகிறார்.

    மேடையில் 24 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடுகிறார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விதமான ஆடையில் அவர் தோற்றம் அளிப்பார்.

    மூன்று மணி நேரம் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ரோஜா, தில்சே, ஸ்லம் டாக் மில்லினர், லகான் போன்ற திரைப்படங்களிலிருந்து பாடல்களைப் பாடுகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான்கு நடன குழுவினர் மற்றும் இந்திய பாரம்பரிய யோகா அடிப்படையிலான கலை நிகழ்ச்சி நடத்துபவர் என பலரும் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

    ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளுக்கான மேடை ஏற்பாடுகளை ஆமி திங்காம் என்ற மேடை அலங்கார நிபுணர் கவனித்து வருகிறார். பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், மரியா கேரி போன்ற பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளை இவர் தான் ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கிழக்கத்திய இசையும் மேற்கத்திய இசையும் சங்கமிக்கும் திருவிழாவாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இருக்கும் என அமெரிக்க இசை வல்லுநர்களும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X