»   »  'ரோஜா'வுக்கு புது கெளரவம்

'ரோஜா'வுக்கு புது கெளரவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரோஜா படத்திற்குப் புதிய கெளரவம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்துள்ள டாப் 10 பாடல்களில் ரோஜாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

மணிரத்னம் இயக்க, கே.பாலச்சந்தர் தயாரிக்க, அரவிந்தசாமி, மதுபாலா உள்ளிட்டோர் நடித்த படம் ரோஜா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம் இது.

ரோஜாவின் பாடல்கள் இசையுலகில் புதிய புரட்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தின் மூலம்தான் மணிரத்னத்திற்கும் தேசிய அளவில் ஒரு பெயர் கிடைத்தது.

அறிமுகமான முதல் படத்திலேயே ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் ரோஜாவுக்குப் புது கெளரவம் கிடைத்துள்ளது. டைம் இதழ் நடத்திய உலகின் டாப் 10 பாடல்களில் ரோஜாவும் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ரஹ்மானிடம் கேட்டபோது வழக்கம் போல 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அடக்கத்தோடு கூறினார்.

ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள், ரோஜாவுக்கும் பாராட்டுக்கள்.

Read more about: rahman roja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil