»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அழியாப் புகழ் பெற்ற நாடகங்களை படைத்த ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறும் நாடகமாக உருவாகிறது. உலகம் முழுவதும்பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமையவிருக்கும் இந்த நாடகத்திற்கு இசை அமைக்கப் போவது யார் தெரியுமா?

நம்மூர் இளம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். அதற்காக அவருக்கு வெளிநாட்டு மதிப்பில் கிடைக்கப் போகும் சம்பவம் 300கோடி ரூபாயை தாண்டுமாம்.

இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள ரகுமான், அடிக்கடி லண்டன் சென்று வந்து கொண்டிருக்கிறார். ஷேக்ஸ்பியர்பெயரில் இயங்கும் அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்படும் இந்த நாடகத்தின் இசையில் ஒரிஜினாலிட்டி இருக்க வேண்டும்என்பதற்காக தான் அவர் லண்டனில் முகாமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

லண்டனில் உள்ள கிராமங்களுக்கு சென்று அந்த காலத்து இசை வடிவம் பற்றி ஆராய்ந்து வருகிறார். லண்டனில் உள்ள மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் இந்த நாடகம் விரைவில் அரங்கேற உள்ளது.

அழியாத காவியங்களாகிவிட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எத்தனையோ ஆங்கில சினிமாவுக்கு அச்சாரமாக அமைந்துள்ளன.அந்த அழியா நாடகக் காவியங்களை தந்த ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாடகத்தை காண ஹாலிவுட்பிரபலங்கள் அனைத்தும் வருகின்றனர்.

அவர்கள் முன்னிலையில் அரங்கேறவிருக்கும் இந்த நாடகத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு தமிழகத்தை சேர்ந்தஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்திருப்பது மிகப் பெரிய பெருமை என்று தமிழ் திரையுலகம் தெரிவிக்கிறது. இப்படியொரு வாய்ப்புஇதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு இன்னொரு முக்கிய பொறுப்பிலும் ரகுமான் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் மிகப் பெரியஅளவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டுள்ளார்.

அதற்கான ஒத்திகையையும் அவர் மேற்கொண்டு வருகிறார். லண்டன் நாடகம், அமெரிக்க இசை நிகழ்ச்சி இந்த இரண்டும் ஏ.ஆர்.ரகுமானை இசை உலகின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடும் என்கிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil