»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் சென்னையில் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை நடத்தினார்இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரோஜாவில் அறிமுகமாகி இன்று சர்வதேச அளவுக்கு சென்றுவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதலாவது இசைநிகழ்ச்சியை லண்டனில் தான் நடத்தினார். அதன் பிறகு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சியைநடத்திவிட்டார்.

மும்பை, டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத்திலும் கூட ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சி நடத்திய அவர் சென்னையில்இதுவரை இசை நிகழ்த்தியை நடத்தியதே இல்லை.

இந் நிலையில் கேன்சர் நோயால் இறந்த இசையமைப்பாளரும் மணிரத்னம், கமல்ஹாசன், பி.சி. ஸ்ரீராம்ஆகியோரின் நண்பருமான மகேசின் நினைவாக அமைக்கப்பட்டுளள அறக்கட்டளைக்காக சென்னையில் இசைநிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டார் ரஹ்மான். இந்த நிகச்சியில் திரப்படும் நிதி புற்று நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க பயன்படுத்தப்படும்.

தரமணியில் உள்ள இந்தியா பிஸ்டன்ஸ் மைதானத்தில் இந்த பிரமாண்டமான இசைக் கச்சேரி நேற்றிரவு (21ம்ததி) நடந்தது. 23 வயலின் கலைஞர்கள், 10 கோரஸ் பாடகர்கள், 45 இசைக் கலைஞர்கள், டிரம்ஸ் சிவமணி எனமேடை நிறைய கலைஞர்கள் நிறைந்து நிற்க ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடலுடன் கச்சேரியைத்தொடங்கினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் பெரும் ஆராவார ஒலி எழுப்பினர்.

இதன் பிறகு டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை ரசிகர்களும்சேர்ந்து பாட ஒரே பாலசுப்பிரமணியம் குஷியாகி ஆடியபடி பாடினார்.

அதன்பிறகு தான் இசையமைத்த பாம்பேட் ட்ரீம்ஸ் நாடகத்தின் ஆலபத்தில் இருந்து பாடல்களைப் பாடினார்ரஹ்மான். இருப்பினும் அந்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இல்லை.

இதைத் தொடர்ந்து ரஹ்மான், சிவமணி மற்றும் கிறிஸ்டி ஆகியோர் இணைந்து ஊலலலா என்ற பாடலைப் பாடினர்.பின்னர் பாபாவில் வந்த டிப்பு டிப்பு பாடல் பாடப்பட்டது. அதில் வரும் புர்ர்ர்ர்ர்யயயயயாாா சத்தத்தைரசிகர்களும் போட்டது தான் ஹை-லைட்.

இதையடுத்து காதல் வைரஸ், தில்சே, பாம்பே ஆகிய படங்களிலிருந்தும் பாடல்கள் பாடப்பட்டன.

பின்னர் மேடைக்கு வந்த பாடலாசியர்கள் வாலியும், வைரமுத்துவும் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டிப் பேசினர்.

கச்சேரியில் பத்து நிமிடங்கள் மறைந்த இசையமைப்பாளர்ம கேஷ் மகாதேவனுக்காக ஒதுக்கப்பட்டது. கிண்டிபுற்றுநோய் கழகத்திலிருந்து வந்திருந்த டாக்டர் சாந்தா புற்றுநோயின் கொடுமை குறித்துப் பேசினார். அதன்பிறகுகச்சேரி தொடர்ந்தது.

நிழ்ச்சியை சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார். மணிரத்னமும் ராஜிவ் மேனனும் அங்கும் இங்கும் வாக்கிடாக்கியுடன் ஓடியாடி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர். கமலஹாசனைப் பார்க்க முடியவில்லை.

சங்கர் மகாதேவன், சுக்வீந்தர் சிங், வசுந்தரா தாஸ், மனோ, சித்ரா, செர்ணலதா, சீனிவாசன், உன்னி கிருஷ்ணன்,ஜானகி, சுஜாதா, அனுபமா என தமிழக பின்னணிப் பாடகர்கள் அனைவரும் மேடையேறி கலக்கினர்.

ரஷீத் அலி என்ற ரஹ்மானின் நண்பர் அவரது பாடல்களை கிடாரிலேயே முழுமையாக வாசித்துக் காட்டிரஹ்மானையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாடல்களுக்கு ஏற்ற ஆடல் நிகழ்ச்சிகளும் நடந்தன. இதற்காக மும்பையில் இருந்து டான்ஸ் குரூப் வந்திருந்தது.

கிட்டதட்ட 5 மணி நேரம் தனது முதல் இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தி ரசிகர்களை இசையில் மூழ்கடித்தார்ரஹ்மான்.

இந்த நிகழ்ச்சிக்காக நூற்றுக்கணக்கான கார்களும் ஆயிரக்கணக்கான பைக்குகளும் குவிந்ததால் தரமணி சாலைஸ்தம்பித்துப் போனது. மாலை 6 மணிக்கு மேல் திருவான்மீயூர், அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டிஆகிய பகுதிகள் வரை வாகனங்கள் நின்று நீண்ட வரிசையில் நின்றன.

மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் தொர்ந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil