»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர்கள் அஜீத், பிரசாந்த், ஜெயராம் ஆகியோரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நடத்தியசோதனையில் கணக்கில் காட்டாத ரூ. 4 கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பல கோடி மதிப்புள்ளசொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி, டைரக்டர் கஸ்தூரி ராஜா ஆகியோர் வீடுகளில் இருந்தும் பலகோடிக்காண சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அஜீத், பிரசாந்த், ஜெயராம் ஆகியோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை இன்வஸ்டிகேசன்ஸ் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனஅனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த மூவரும் நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

ஷாலினியின் பெற்றோர் வீட்டில்...

திருவான்மியூரில் உள்ள சீவர்ட் சாலையில் உள்ள நடிகர் அஜீத்தின் வீடு, இந்தத் தெருவில் இருந்து 4 தெரு தள்ளி உள்ள அஜீத்தின்பெற்றோர் வீடு, அஜீத்தின் மனைவி ஷாலியின் பெற்றோர் வீடு, அஜீத்தின் அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் ஒரேநேரத்தில் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது அஜீத்தின் முதலீடுகள்,சொத்துகள் குறித்து கணக்கில் காட்டப்படாத பல பைல்கள் சிக்கின.

அஜீத் பினாமியின் அலுவலகத்தில்...

அதே போல அஜீத்தின் பினாமி என கருதப்படும நிக் ஆர்ட்ஸ் படத் தயாரிப்பாளர் சக்கரவர்த்தியின் வீட்டிலும், அலுவலகத்திலும்ரெய்ட் நடந்தது.

இதையடுத்து நடிகர் அஜீத் தனது வில்லன் பட சூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. நேற்றும் அவர் வருமான வரித்துறைஅலுவலகத்தில் ஆஜராக உள்ளதால் சூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுவிட்டது.

பிரசாந்த் வீட்டில் கோடிகள்...

அதே நேரத்தில் நடிகர் பிரசாந்த்தின் வீட்டிலும் சோதனை நடந்தது. அவரது அப்பா நடிகர் தியாகராஜனிடம் வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிரசாந்தின் வீட்டில் பல கோடி கருப்புப் பணம் சிக்கியது. இதையடுத்துபிரசாந்த் மீதும் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், அவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனஉத்தரவிட்டனர்.

ஜெயராம்...

அதே போல மலையாளத்தில் இருந்து தமிழில் சக்கைபோடு போட்டுக் கொண்டுள்ள நடிகர் ஜெயராமின் வீட்டிலும் அதிரடிசோதனை நடந்தது. அவரிடம் இருந்தும் கருப்புப் பணமும், வரி ஏய்ப்பு செய்ததற்காக ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டன.இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரின் வீட்டிலும் அலுவலகத்திலும்சோதனை நடந்தது. இங்கு என்ன கைப்பற்றப்பட்டது என்று தெரியவில்லை.

துள்ளுவதோ இளமை பணம்...

சமீபத்தில் சின்னப் பசங்களை வைத்து மலையான சீன் பட ரேஞ்சில் துள்ளுவதோ இளமை படத்தைத் தயாரித்து ரூ 8 கோடிக்கும்அதிகமாக லாபம் பார்த்த டைரக்டர் கஸ்தூரி ராஜாவும் தப்பவில்லை. அவரது வீட்டிலும் புகுந்த அதிகாரிகள் பல ஆவணங்களைஅள்ளிச் சென்றுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil