»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும், இசைஞானி இளையராஜாவும் மீண்டும் இணைகிறார்கள்.இசையமைக்க அல்ல- பாட்டுப் பாட. அந்தப் பாடலுக்கு இசையமைக்கப் போவது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!

ஒரு காலத்தில் தனகுக்குப் போட்டியாளராக இளையராஜாவைப் பார்த்த எம்.எஸ்.வி. பின்னாளில் அவருக்குநெருங்கிய நண்பரானார்.

எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் இணைந்து மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட சில படங்களுக்குஇசையமைத்தனர். தனது சில பாடல்களில் எம்.எஸ்.வியை பாடவும் வைத்துள்ளார் இளையராஜா.

மேலும் இளையராஜா படு பிஸியாக இருந்த காலத்தில், பாடல்களுக்கு இளையராஜா மெட்டுப் போட்டுநோட்ஸ்களைத் தந்துவிடுவார். கங்கை அமரனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இந்த நோட்ஸ்களை இசைக்கலைஞர்களை வைத்து இசையாக மாற்றுவார்கள்.

இது தவிர இளையராஜாவின் பல படங்களில் ரீ-ரெக்கார்டிங் பொறுப்பையும் ஏற்றிருந்தார் எம்.எஸ்.வி. அதற்குதகுந்த ஊதியத்தையும் உரிய மரியாதையையும் எம்.எஸ்.விக்குத் தந்து வந்தார் இளையராஜா.

இளையராஜாவுடன் எம்.எஸ்.வி. சேர்ந்து பணியாற்றி இப்போது நீண்டகாலமாகிவிட்டது. இந் நிலையில் இருவரும்சேர்ந்து ஒரு பாடலைப் பாடப் போகின்றனர்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு உன்னைசரணடைந்தேன் என்று பெயரிட்டுள்ளார்கள்.

ஹீரோக்களாக சரணும், கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபுவும் நடிக்கிறர்கள். இவர்கள் தவிர பரவைமுனியம்மாவுக்கு அசத்தலான வேடம் தரப்பட்டுள்ளதாம்.

படத்தை இயக்கப் போவது சத்திரக் கனி. இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான அண்ணி டிவி சீரியலைஇயக்கியவர்.

இந்தப் படத்தில் இரண்டு விசேஷங்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.பி.பாலசுப்ரணியம் இசையமைக்கிறார். கடைசியாக அவர் இசையமைத்ததுசிகரம் படத்திற்கு. அதில் எஸ்.பி.பி. போட்ட டைடில் சாங், வண்ணம் கொண்ட வெண்ணிலவே.. வானம் விட்டுவாராயோ.. செம ஹிட் ஆனது.

படத்தின் இன்னொரு விசேஷம், இசைஞானியும், மெல்லிசை மன்னரும் இணைந்து பாடப் போவது. இருவரையும்பாட வைத்து டைட்டில் சாங் ரெடி பண்ணப் போகிறாராம் எஸ்.பி.பி.

இதற்காக சில அற்புதமான ட்யூன்களை இருவரிடமும் போட்டுக் காட்டியிருக்கிறாராம். இருவரும் சேர்ந்து இதில்ஒரு ட்யூனை முடிவு செய்வார்களாம்.

கலக்குங்கப்பா...

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil