»   »  டி.ஆரின் கருப்பனன் காதலி!

டி.ஆரின் கருப்பனன் காதலி!

Subscribe to Oneindia Tamil

வீராசாமி படத்தை பார்த்த பலபேர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்ல. அதற்குள் அடுத்த படத்தை டைரக்ட் செய்ய கிளம்பிவிட்டார் டி.ராஜேந்தர்.

படத்துக்குப் பெயரை கருப்பனன் காதலி என்று வைத்திருக்கிறாராம்.

இந்தப் படத்திலும் இவர் நடிக்கிறாராம் (உஷ்...இப்பவே கண்ண கட்டுதே). இவர் படங்களில் வழக்கம்ேபால் ஒரு ஹீரோவும் வருவார். இதில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தப் போகிறாராம் (அநேகமாக அந்த ஹீரோவுக்கு இதுவே கடைசி படமாகவும் இருக்கலாம்)

மற்றபடி டைரக்ஷனோடு வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், எடிட்டிங், ஆர்ட் டைரக்சன், சண்டை பயிற்சி, கேமரா பிளஸ் நடிப்பு ஆகிய அனைத்தையும் டி.ஆர் கவனிக்கவுள்ளாராம்.

இது குறித்து டி.ஆர். கூறுகையில்,

இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கான காதல் கதை. படத்தில் 3 ஹீரோயின்கள். அதில் ஒருவர் பாப்புலரானவர் (ஓ.கே, மும்தாஜூக்கு அடுத்த படம் ரெடி). மற்ற 2 கதாநாயகிகளாக மும்பை மாடல்கள் நடிப்பார்கள். இது தொடர்பாக மாடல் கோ-ஆர்டினேட்டர்களுடன் பேசி வருகிறேன்.

படத்தின் பெயர், படம் ரிலீஸ் ஆகும்போது மாற்றப்படலாம். (இதுக்கு பேரையே கடைசியில வச்சுறலாமே)

இதில் சிம்புவும் சில காட்சிகளில் நடிக்கலாம். அவரது டேட்ஸ் கிடைப்பதைப் பொறுத்து யூஸ் செய்வேன்.

வீராசாமி, கருப்பனின் காதலி எல்லாமே சுத்தமான தமிழ் பெயர்கள். அதனால் தான் படத்துக்கு இந்தப் பெயர்களை வைத்திருக்கிறன் என்றார்.

இவரது குடும்ப தயாரிப்பு நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் படத்தை தயாரிக்கப் போவது டி.ஆரின் மனைவி உஷா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil