»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

டிசம்பர் 12ம் தேதி. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த ஆண்டு அவருக்கு 55 வயது பிறக்கிறது. வழக்கம் போல இந்த முறையும்ரசிகர்களைத் தவிர்த்துவிட்டு பிறந்த நாளை தன் வரையில் சுருக்கிக் கொள்கிறார் ரஜினிகாந்த்.

கடந்த பல ஆண்டுகளாகவே பிறந்த நாளின்போது ரசிகர்களை சந்திப்பதை ரஜினி தவிர்த்து வருகிறார். நான் வெளியூரில் இருப்பேன்,எனவே ரசிகர்கள் சென்னைக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு பிறந்த நாளுக்கு முன்பாக ரஜினியிடமிருந்து வெளியாகும்.

அதேபோல இந்த முறையும் ரசிகர்களிடமிருந்து விலகி நிற்கப் போகிறார் ரஜினி. இந்த முறை ஹைதராபாத்தில் சந்திரமுகி படப்பிடிப்புக்காகசெல்லும் ரஜினிகாந்த் அங்கேயே தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

9-ம் தேதி ரஜினி, பிரபு, ஜோதிகா உள்ளிட்ட படக் குழுவினர் ஹைதராபாத் செல்கின்றனர். பிறந்தநாளான 12ம் தேதி வரை படப்பிடிப்புக்குழுவினர் அங்கேயே தங்கியிருப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிறந்த நாளை கொண்டாடுகிறார் ரஜினி.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா- தனுஷ் திருமணத்திற்கும் ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்கள், பிறந்தநாளுக்காவது தங்களது தலைவரை சந்திக்கலாம் என்ற ஆசையில் இருந்தனர்.

ஆனால் ரஜினி வழக்கம்போல் பிறந்தநாளை வெளியூரில் கொண்டாட முடிவெடுத்திருப்பதால், ரசிகர்களின் ஆசை நிராசையாகிவிட்டது.

சந்திரமுகியின் ஒரிஜினலான மலையாள மணிச்சித்திரத்தாழ் படத்தின் காப்பிரைட் உரிமையை அதன் தயாரிப்பாளரும், நடிகருமானமோகன்லால் யாருக்கும் கொடுக்கவில்லை என்பதை நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது, சந்திரமுகி படத்தின் கதை மணிச்சித்திரத்தாழ் கதையாக இருக்கக் கூடாது என்று வாசுவுக்கு மோகன்லால் அறிவுறுத்தியுள்ளாராம்.

குழம்பிப் போன வாசு, தற்போது படத்தின் கதையை மாற்றி வருகிறார். இதனால் சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள், நகைச்சுவைக்காட்சிகள் போன்றவற்றை மட்டுமே சுட்டு வருகிறார்களாம். முக்கியப் பகுதிகள் இன்னும் படமாக்கப்படவில்லையாம்!

"டைட்டில் சாங்" ரெடி:

இதற்கிடையே சந்திரமுகி படத்தின் டைட்டில் சாங் ரெடியாகி விட்டதாம். சூட்டோடு சூடாக பாடலையும் பதிவு செய்து விட்டார்களாம்.

இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளாராம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். வித்யாசாகர் இசையில் இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்று படப்பிடிப்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முத்து படத்தில் வந்த ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் போல இந்தப் பாடலும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளால் வடிக்கப்பட்டுள்ளதாம். வழக்கமாகரஜினிக்கு பஞ்ச் பாடல்களை எழுதும் வைரமுத்து இந்த முறை எழுதவில்லை.

மாறாக பா.விஜய்யிடம் கொடுக்கப்பட்டது. ரஜினியை புகழும் அதே சமயத்தில் எந்தவித இமேஜுக்குள்ளும் சிக்கி விடாத வகையிலான வார்த்தைகளைப்போட்டு பாட்டை உருவாக்கியுள்ளாராம் பா.விஜய்.

பாடல் பதிவின்போது உடனிருந்த ரஜினி, ரெக்கார்டிங் முடிந்தவுடன் வித்யாசாகரை பாராட்டித் தள்ளிவிட்டார். அப்படி ஒரு ஆட்டம் போட வைக்கும் ட்யூன்போட்டிருக்கிறாராம் வித்யாசாகர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil