»   »  ரயில் விடும் ரஜினி!

ரயில் விடும் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி படு வித்தியாசமான பார்ட்டி. மற்றவர்களிடமிருந்து பல விஷயங்களிலும் தனித்து விளங்குபவர். அப்படிப்பட்ட சுவாரஸ்ய மனிதரைப் பற்றிய ஒரு சூப்பர் மேட்டர் இது.

ரஜினி மனதில் இன்னும் பல சின்னச் சின்ன ஆசைகள் நிறைய இருக்கிறதாம். அவற்றை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்வார்.

ஒருமுறை படப்பிடிப்பின்போது திடீரென நள்ளிரவில் புல்லட்டில் ஏறிப் பறந்து விட்டு வந்தார்.

புல்லட்டில் ரவுண்டு போவது ரஜினிக்கு ரொம்ப பிடித்த விஷயம்.

அதேபோல பெங்களூரிலும் வட இந்தியாவின் பல ஊர்களிலும், சாதாரண பயணி போல, மாறுவேடத்தில், பயணிப்பது ரஜினிக்கு ரொம்பப் பிடிக்கும்.

பலமுறை அவ்வாறு போயுள்ளார்.

ரஜினிக்கு புல்லட்டைப் போலவே ரொம்பப் பிடித்த இன்னொரு விஷயம் ரயில். ரயிலில் பயணிப்பது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போலா.

ஆனால் முன்பு போல இப்போதெல்லாம் அவரால் அடிக்கடி ரயிலில் போக முடியவில்லையாம்.

இருந்தாலும் தனது ரயில் ஆசையை நிறைவேற்ற சூப்பர் ஐடியா செய்தார் ரஜினி. சென்னைக்கு அருகே, கிழக்குக் கடற்கரைச் சாலையில், கேளம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கே ரயிலைக் கூட்டி வந்து விட்டார் ரஜினி.

சமீபத்தில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடந்த ரயில் பெட்டி பொது ஏலம் மூலம் 3 ஏ.சி. பெட்டிகளை ஏலத்தில் எடுத்துள்ளார் ரஜினி.

தற்போது அந்தப் பெட்டிகள் கேளம்பாக்கத்திற்கு வர ஆரம்பித்துள்ளன. ஒரு பெட்டி கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்பட்டு விட்டது.

அந்தப் பெட்டி, தற்போது பண்ணை வீட்டின் நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே பிளாட்பாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தண்டவாளம் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். ஒரு குட்டி ரயில் நிலையமும் கட்டப்பட்டுள்ளது.

ரஜினி பண்ணை வீட்டின் பரப்பளவு 5 ஏக்கர். இந்த பண்ணை வீட்டை சுற்றி ஓடும் வகையில் இந்த ரயிலை இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

ரயில் பெட்டி, ரயில்வே தண்டவாளம் (ஒரிஜினல் ஸ்லிப்பர் கட்டைகள் அல்ல, அதுபோலவே வடிவமைக்கப்பட்டது)ஆகியவற்றுடன் மினி ரயில் நிலையம் ரஜினி வீட்டுக்குள் உருவாகி வருகிறது.

இந்தக் காட்சி கிழக்குக் கடற்கரைச் சாலைப் பக்கம் போவோருக்கு படு வித்தியாசமாக தெரிகிறது. காரணம, அக்கம் பக்கத்தில் ரயில் நிலையமே கிடையாது. ரயில் பார்க்க வேண்டுமானால் தூரத்தில் உள்ள செங்கல்பட்டுக்குத்தான் போக வேண்டும்.

ரஜினி பண்ணைக்குள் ரயில் வந்துள்ளததுதான் கேளம்பாக்கத்தில் இப்போதைய சூடான பேச்சே.

படா ஷோக்கான ஆளா கீறாருப்பா நம்ம தலீவரு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil