»   »  4ம் தேதி சிவாஜி ஆடியோ!

4ம் தேதி சிவாஜி ஆடியோ!

Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த், ஷங்கர், ஏவி.எம் கூட்டணியில் உருவாகியுள்ள சிவாஜி படத்தின் பாடல்கள் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது.

சிவாஜி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. கடைசிக் கட்ட நகாசு வேலையில் ஷங்கர் பிசியாக இருக்கிறார். பாடல்களும் ரெடியாக விட்டன. ஏப்ரல் 4ம் தேதி பாடல்களை வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில மாதங்களாகவே சிவாஜி படத்தின் பாடல்களை ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். பாடல் கேசட்டுகள் மற்றும் சிடிக்களை ஏப்ரல் 4ம் தேதி வெளியிடவுள்ளோம். ஏவி.எம். ஆடியோ நிறுவனம் இந்த கேசட்டுகளை வெளியிடுகிறது என்று கூறியுள்ளார் சரவணன்.

இதற்கிடையே பட ரிலீஸ் திட்டமிட்டபடி ஏப்ரல் 12ம் தேதிக்கு இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் சில நாட்கள் தள்ளிப் போகலாமாம். படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக ஷங்கர் தரப்பிலிருந்து இன்னும் உறுதியான வார்த்தை ஏவி.எம். சரவணனுக்குத் தெரிவிக்கப்படவில்லையாம்.

படமும், பாடலும் வரும்போது வரட்டும், நம்ம வேலையப் பார்ப்போம் என்று ரஜினி ரசிகர்கள் கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் நடத்துவது என அமர்க்களப்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

சென்னையில் சிவாஜி படம் ரிலீஸாகவுள்ள ஆல்பட் தியேட்டரில் பிரமாண்ட சிவாஜி பட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல டிஜிட்டல் பேனர்களையும் வைத்துள்ளனர்.

50 அடி உயர கட் அவுட்டை ரசிகர்கள் வணங்கி படம் வெற்றி அடைய பிரார்த்தனையும் செய்தனர்.

உதயம் தியேட்டர் வளாகத்தில் 120 அடி உயர கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர். வளக்கமாக சத்யம் திரையரங்க வளாகத்தில் இட நெருக்கடி காரணமாக கட் அவுட்டுக்கு அனுமதி கிடையாது. ஆனால் சிவாஜி படத்துக்காக விதி விலக்கு அளித்து கட் அவுட் வைக்க வழி விட்டுள்ளனர்.

இதேபோல பிருந்தா, பாரத் திரையரங்கங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் பளிச்சிட ஆரம்பித்துள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil