»   »  லீக் ஆன சிவாஜி பாட்டு

லீக் ஆன சிவாஜி பாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி படப் பாடல்கள், காட்சிகளோடு, எம்பி 3 வடிவில் இணையதளங்களில் சக்கைப் போடு போட ஆரம்பித்துள்ளது.

சிவாஜி படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், பரபரப்புகள், சர்ச்சைகள். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ரஜினி சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைையக் கிளப்பின. கடுப்பான ஷங்கர், படப்பிடிப்பை படு ரகசியமாக நடத்தி வந்தார்.

இடையே புதுப் பரபரப்பு கிளம்பியது. சிவாஜி பட டிவிடி வெளியாகி விட்டதுதான் அந்த பரபரப்பு. இந்த செய்தியை நாம் முன்பே முதன் முதலில் தெரிவித்திருந்தோம். பிளாட்பாரத்தில் போட்டு சிவாஜி டிவிடியை விற்கிறார்கள் என்று கூறப்பட்டது.

சிவாஜி படத்தின் பாடல் வெளியீடு ஏப்ரல் 4ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதற்குள் எம்.பி 3 வெளியாகி விட்டதாம், அத்ேதாடு பாடல்கள் அனைத்துமே காட்சிகளோடு வெளியாகி இணையதளங்களில் சக்கை போடு போடுகிறது.

படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களில் 3 பாடல்கள், முழுக் காட்சிகளோடு அட்டகாசமாக வெளியாகியுள்ளது. இங்கிலாந்திருந்து நடத்தப்படும் ஒரு இணையதளத்தில் 22ம் தேதி அதிகாலை முதல் இந்தப் பாடல்கள் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட், வா வா சிவாஜி, சஹானா சாரல் ஆகிய அந்த மூன்று பாடல்களும் படு சூப்பராக வந்துள்ளன. சன்லைட், மூன்லைட் பாடலில் அமெரிக்க டான்ஸர்கள் ஆடியுள்ளனர்.

வா வா சிவாஜி பாடலை ஹரிஹரன்-சாதனா சர்கம் பாடியுள்ளனர். சஹானா சாரல் பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார். மூன்று பாடல்களுமே ரஹ்மான் பாணி டச்சிங்கில் படு கலக்கலாக வந்துள்ளன.

சிவாஜி பாடல் வெளியாகி விட்ட செய்தி நிச்சயம் ஷங்கர் அன் கோவுக்கு சந்தோஷமானதாக இருக்க முடியாது. பெரும் அதிர்ச்சியூட்டும் விஷயமாகவே இருக்கும்.

படம் குறித்த தகவல்களையே படு பத்திரமாக பாதுகாத்து வரும் ஷங்கர், 3 பாடல்கள் எப்படி வெளியானது என்பது ெபரும் குழப்பமாக இருக்கும்.

ஷங்கரின் முந்தைய படமான பாய்ஸ் படத்திற்கும் இதே கதிதான் நேர்ந்தது. அதிகாரப்பூர்வமாக பாடல் வெளியிடும் முன்பே பாய்ஸ் பாடல் வெளியாகி விட்டது.

இப்போது சிவாஜி படப் பாடல் வெளியான விவகாரத்தில் உள்ளுக்குள்ளேயயேதான் யாரோ லீக் செய்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

பாடல் பதிவுக் கூடத்திலிருந்தோ அல்லது ரஹ்மானின் இசைக் குழுவிலிருந்து சிலரோதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த பாடல் லீக் குறித்து போலீஸில் ஏவி.எம். நிறுவனம் புகார் கொடுக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஏவி.எம். சரவணனிடம் நாம் கேட்ேபாது, கருத்து கூற மறுத்து விட்டார்.

அதிகாரப்பூர்வமாக ரிலீஸாகும் முன்பே திருட்டுத்தனமாக மூன்று பாடல்களை உருவி இணையதளத்தில் உலவ விட்டு விட்டனர். அதேபோல படத்தையும் முன்கூட்டியே காணும் வாய்ப்பையும் மறுத்து விட முடியாது

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil