»   »  சிவாஜி வால்பேப்பர்..பரபர சேல்ஸ்

சிவாஜி வால்பேப்பர்..பரபர சேல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏவிஎம் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து, ரஹ்மானின் இசையமைப்பில் உருவான சிவாஜி படத்தின் பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக, பேசப்படும்படியாக இருக்க வேண்டும் என இப்படத்தின் இயக்குநர் ஷங்கர் நினைப்பது போலவே இப்படத்தின் இசை சர்வ தேச தரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ரஹ்மான் பராகுவே நாட்டிலும், லண்டனிலும் பின்னணி இசையை சேர்த்து வருகிறார். இதற்காக கடந்த மாதமே லண்டன் சென்றுவிட்டார் ரஹ்மான்.

பின்னணி இசை கோர்ப்பு முடிந்தவுடன் படம் ரிலீசுக்கு ரெடியாகிவிடும்.

இது வரை இந்த படத்தின் ஏழு பாடல்களும் செல் போனின் ரிங் டோனாக 1 லட்சத்து 50,000 பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இதன் மூலம் செல்போன் வர்த்தகத்திலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிவிட்டார் ரஜினி.

இதை போலவே சிவாஜி கம்ப்யூட்டர் வால்பேப்பருக்கும் நல்ல வரேவற்பு கிடைத்துள்ளது. அறிமுகப்படுத்திய 3 நாட்கள் ஆன நிலையில் ரூ.50 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாம். மே மாதம் ரிலீஸ் ஆக போகும் இந்த படத்தின் வால்பேப்பரினால் வருமானம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil