»   »  மம்முட்டியுடன் மீண்டும் ரஜினி?

மம்முட்டியுடன் மீண்டும் ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தனது படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று மெகா ஸ்டார் மம்முட்டி கேட்டுக் கொண்டுள்ளாராம். ரஜினி இன்னும் பதில் சொல்லவில்லையாம்.

மலையாலத்தில் பிக் பீ என்ற பெயரில் புதுப் படம் தயாராகிறது. மம்முட்டிதான் ஹீரோ. இப்படத்தில் இரு முக்கிய நடிகர்களை தலை காட்ட வைக்க விரும்பினார் மம்முட்டி. ஒருவர் நிஜமான பிக் பீ அமிதாப் பச்சன். இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அமிதாப்பிடம் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது உடனே சரி என்று சொல்லி விட்டாராம். அபிஷேக் பச்சன் கல்யாணத்திற்குப் பிறகு நடித்துக் கொடுப்பதாக கூறியுள்ளாராம் அமிதாப்.

அதேபோல ரஜினியிடமும் கேட்டுள்ளார் மம்முட்டி. சிவாஜி பட வேலையில் பிசியாக இருப்பதால் அதை முடித்து விட்டு சொல்வதாக சொல்லியுள்ளாராம் ரஜினி. இருந்தாலும் நடித்துக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

ரஜினியும், மம்முட்டியும் இதற்கு முன்பு மணிரத்தினத்தின் தளபதி படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் இருவருக்கும் சமமான அளவில் காட்சிகளை வைத்திருந்தார் மணிரத்தினம்.

அதேபோல, ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்த தமிழகத்தில் ஒரு கிளைமாக்ஸும், மம்முட்டி ரசிகர்களை திருப்திப்படுத்த கேரளத்தில் ஒரு கிளைமாக்ஸும் என தளபதி படத்துக்கு இரு கிளைமாக்ஸ் காட்சிகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மம்முட்டியின் பிக் பீ படத்தில் ரஜினி நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மலையாள ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil