»   »  சிவாஜிக்கு வரி விலக்கு

சிவாஜிக்கு வரி விலக்கு

Subscribe to Oneindia Tamil

சிவாஜி பட பெயர் தமிழா, வேறு மொழியா என்ற சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவாஜி என்பது தமிழ்ப் பெயர்தான் என்று கூறி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கை தமிழக அரசு அளித்துள்ளதாம்.

தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கை தமிழக அரசு அளித்து வருகிறது. இதனால் முன்பு போல ஹாய், பாய், சாய் என கிறுக்குத்தனமாக பெயர் சூட்டாமல், நல்ல தமிழில் பெயர் சூட்டி வருகிறார்கள் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தின் பெயர் தமிழா, அப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து சில அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டத் தயாராகி வந்தன.

பாமக எம்.எல்.ஏக்கள் இதுகுறித்து சட்டசபையிலேயே கேள்வி எழுப்பினர். அப்போது இதுகுறித்து பரிசீலித்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் பரிதி இளம்வழுதி விளக்கினார்.

இந்த நிலையில் சிவாஜி என்பது ஒரு பெயர், எனவே சிவாஜி படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.

சிவாஜி படத்தை சில நாட்களுக்கு முன்புதான் திமுகவின் கலைஞர் டிவி பெரும் விலை கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் அப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெயரில் என்ன இருக்கிறது?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil