»   »  ரஜினிக்கு குரல் கொடுத்த மனோ

ரஜினிக்கு குரல் கொடுத்த மனோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல பின்னணிப் பாடகர் மனோ, சிவாஜி தெலுங்குப் படத்தில் ரஜினிகாந்த்துக்குக் குரல் கொடுத்துள்ளார்.

சிவாஜியை தரிசிக்க தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு விசிறிகளும் விறுவிறுப்பாக காத்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு சிவாஜி குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

முத்து தெலுங்குக்குப் போனபோது ரஜினிக்காக குரல் கொடுத்தவர் பின்னணிப் பாடகர் மனோ. இப்போது சிவாஜிக்கும் கூட அவரேதான் பின்னணி பேசியுள்ளாராம்.

கமல்ஹாசன் படங்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசுபவர் இன்னொரு பிரபலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவரது குரலின் சாயல் கொண்டவரான மனோ இப்போது ரஜினியின் ஆஸ்தான தெலுங்கு குரலாக மாறியுள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது மனோ சந்தோஷமாக பேசினார். ரஜினியின் குரலாக மக்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமான விஷயம். நான் அதிர்ஷ்டசாலிதான் என்று சொல்ல வேண்டும்.

ரஜினி சாரின் குரலுக்கு எனது குரல் பொருத்தமாக அமைந்திருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். ரஜினிக்காக குரல் கொடுத்துப் பேசுவதில் எனக்கு எந்த சிரமுமம் இருக்கவில்லை என்றார் மனோ.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

சிவாஜி டப்பிங் முடிந்த பின்னர் ரஜினி சாரிடமிருந்து போன் வந்தது. என்னைப் பாராட்டிப் பேசினார் என்றார் மனோ.

ஷ்ரியாவுக்கு பிரபல பின்னணிக் குரல் நட்சத்திரமான சவீதாதான் குரல் கொடுத்துள்ளாராம். தமிழிலும் இவர்தானாம். பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய், சிம்ரன், ஜோதிகா என பலருக்கும் குரல் கொடுத்து அவர்களின் நடிப்புக்கு வலு சேர்த்தவர் சவீதா என்பது தெரிந்ததுதானே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil