»   »  ஜப்பானில் சிவாஜி எப்போ?

ஜப்பானில் சிவாஜி எப்போ?

Subscribe to Oneindia Tamil

ஜப்பான், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் சிவாஜி படம் ரிலீஸாகிறதாம்.

கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் உலகெங்கும் சிவாஜி ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு வருகிறது. பல உலக நாடுகளில் சிவாஜி ரிலீஸாகி விட்டாலும் கூட ரஜினிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ள ஜப்பானிலும், தென் ஆப்பிரிக்காவிலும் இன்னும் அப்படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த இரு நாடுகளிலும் இந்த மாதக் கடைசியில்தான் படம் திரைக்கு வருகிறதாம்.

ஜப்பானில் ரஜினிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எல்லாம் முத்துவும், படையப்பாவும் சம்பாதித்துக் கொடுத்தவை. ஏராளமான ரசிகர் மன்றங்களும் உள்ளன. ஜப்பானியர்களை ரஜினி வெகுவாக கவர்ந்து விட்டார்.

முத்துப் படத்தைப் பார்த்த பின்னர் ஜப்பானியர்களுக்கு ரஜினி பெரும் மாயாஜால ஹீரோவாக மாறிப்போயுள்ளார்.

முத்து படத்திற்குப் பிறகு ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் ஜப்பான் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடுகின்றனர். கடைசியாக வந்த சந்திரமுகி ஜப்பானில் 200 நாட்கள் ஓடி அசத்தியது.

தென் ஆப்பிரிக்காவிலும் அதே கதைதான். சமீபத்தில்தான் தென் ஆப்பிரிக்காவில் சந்திரமுகியின் 250வது நாள் விழாவை விமரிசையாக கொண்டாடினர் ரசிகர்கள்.

இந்த நிலையில் ரஜினியின் சிவாஜியை படு ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர் இரு நாட்டு ரசிகர்களும். திட்டமிட்ட காலத்திற்குப் பின்பே இந்த இரு நாடுகளிலும் சிவாஜியை திரையிட ஏவி.எம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பிரிண்டுகளும் இந்த இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இங்கு திரையிடும் உரிமையைப் பெற்றுள்ள அய்ங்கரன் நிறுவனம் ஜப்பானில் 60 பிரிண்டுகளையும், தென் ஆப்பிரிக்காவில் 50 பிரிண்டுகளையும் அனுப்பவுள்ளது.

அதேபோல கொரியா, ரஷ்யா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் ஜூலை முதல் வாரத்தில் சிவாஜி ரிலீஸ் ஆகிறதாம்.

இப்படிப் பல நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிவாஜியை, மலாய் மற்றும் சீன மொழிகளில் டப் செய்ய தற்போது ஏவிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டப் செய்யப்பட்ட பின்னர் சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேரடியாக ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

இதற்கிடையே, சிகாகோவில் சிவாஜி திரையிடப்பட்டபோது அதை திருவிழா போலக் கொண்டாடி அசத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

இங்குள்ள புளூமிங்டேல் கோர்ட் தியேட்டரில் சிவாஜி திரையிடப்பட்டது. படத்தைப் பார்க்க ரசிகர்கள் வரிசை கட்டி படு ஆர்வத்தோடு காத்திருந்துப் படத்தைப் பார்த்துள்ளனர்.

சிகாகோ ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினிபோலவே உடை அணிந்து படம் பார்க்க வந்திருந்தது படு வித்தியாசமாக இருந்தது.

படம் தொடங்குவதற்கு முன்பு பூசணிக்காயை உடைத்து அசத்தினர் ரசிகர்கள். நேபர்வில்லியில் உயர் நிலைப் பள்ளியில் படித்து வரும் 14 வயதே ஆன அபூர்வா ஆனந்தன் தீவிர ரஜினி ரசிகர்.

படம் பார்க்க வந்திருந்த அபூர்வா கூறுகையில், பிராட் பிட் படம் பார்க்க வந்தது போல உணர்கிறேன் என்று புளகாங்கிதமடைந்து கூறினார். ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் வாங்கி விட்டாராம் அபூர்வா ஆனந்தன். சிவாஜியைப் பார்த்த அவர் மீண்டும் ஒருமுறை பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.

சிகாகோ தமிழ் சங்க செய்தித் தொடர்பாளர் ராஜு ரகுராமன் கூறுகையில், சிகாகோவில் 4000 தமிழ் குடும்பங்கள் உள்ளது. அவர்களுக்கு தமிழ்ப் படங்கள் என்பது மிகப் பெரிய நிகழ்ச்சி. அதிலும் சிவாஜி பெரும் திருவிழா போலவே காணப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் தமிழில் உருவான சிவாஜி என்பது இங்குள்ள தமிழர்களுக்குப் பெருமையான விஷயம் என்றார்.

கார்த்திக் மதன் என்பவர் கூறுகையில், ஆசியாவிலேயே பெரிய ஸ்டார் ஜாக்கி சான். அதற்கு அடுத்து ரஜினிதான். ரஜினியின் ஸ்டைல் மற்றும் மானரிசம் உலகப் புகழ் பெற்றது. அவரது படங்களில் பெரும்பாலும் காமெடியும் ஆக்ஷனும் அதி கலக்கலாக இருக்கும் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil