»   »  வசூல் ராஜா சிவாஜி!

வசூல் ராஜா சிவாஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படம் தமிழகத்தில் 10 நாட்களில் ரூ.30 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது.

சிவாஜி படம் குறித்த செய்திகள் முன்பு கசிந்தன. இப்போதோ படம் செய்து வரும் சாதனைகள் குறித்த செய்திகள் அதிரடியாக வந்து குவிந்தவண்ணம் உள்ளன.

சிவாஜி வெளியாகி 10 நாட்களாகி விட்டது. இந்த பத்து நாட்களுக்குள் தமிழகத்தில் சிவாஜிக்கு ரூ. 30 கோடி வரை வசூலாகியுள்ளதாம். இதை பெரிய சாதனையாக சொல்கிறார்கள். இந்திய சினிமா வரலாற்றில் இது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

சிவாஜியை ரூ. 80 கோடி முதலீட்டில் தயாரித்தனர். அந்த முதலீட்டை இன்னும் கொஞ்ச நாளிலேயே சிவாஜி திரும்பி அள்ளி விடும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட சிவாஜி சக்கை போடு போட்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடியை தொட்டு விட்டதாம் சிவாஜி. படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ. 140 முதல் 150 கோடி வரை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை வெளிநாடுகளில் திரையிட்டுள்ள அய்ங்கரண் கருணாமூர்த்தி கூறுகையில், இப்படத்தை வாங்கியதன் மூலம் 200 சதவீத திருப்தியை அடைந்துள்ளேன். எனது வாழ்க்கையில் ஒரு படத்தின் மூலம் இவ்வளவு லாபத்தை பார்த்தது இதுவே முதல் முறையாகும் என்றார் கருணாமூர்த்தி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil