»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வசிஷ்டர் வாயால் வாழ்த்துப் பெற்றால் போதும் என்பார்கள். அதுபோல ரஜினியின் வாயால் வாழ்த்துப் பெற்றுள்ளார் விஜய்.

விஜய் நடித்து வெளியாகியுள்ள தமிழன் படத்தை சமீபத்தில் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பார்த்துள்ளார். படத்தில், ஆடல் பாடலுடன் கூடிய விஜய்யை காணாமல்,சமூக விழிப்புணர்வுக்கு வித்திடும் விஜய்யைப் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியமாகப் போய் விட்டதாம்.

படத்தைப் பார்த்து முடித்து வீட்டுக்கு வந்ததும் அப்பாவைப் பார்த்து படம் குறித்துக் கூறியுள்ளார். இந்தப் படத்தை கண்டிப்பாக நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்என்றாராம். அப்படி என்ன சூப்பரான படம் என்று தலையை கோதி விட்டுக் கொண்ட ரஜினி, பாபா பட பிசியிலும் கூட தமிழனுக்காக கொஞ்சம் நேரம்ஒதுக்கினார்.

விஜய்யை அழைத்து தமிழன் படம் பாக்கனுப்பா என்றாராம். உடனடியாக பிரத்யோக காட்சிக்கு ஏற்பாடானது. குடும்பத்துடன் வந்த சூப்பர் ஸ்டார்படத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்து போனாராம்.

இப்படிப்பட்ட படம்தாம்பாஇப்போ ரொம்பத் தேவை, நல்ல கதை, நல்ல கதை என்று புகழ்ந்த ரஜினி, விஜய்யை அழைத்துப் பாராட்டியுள்ளார். படம் குறித்துநல்லா பப்ளிசிட்டி பண்ணுங்க என்றும் அட்வைஸ் செய்தாராம்.

அத்தோடு நிற்கவில்லை அடிக்கடி விஜய்க்கு போன் செய்து ரசிகர்களின் காமெண்ட் எப்படி உள்ளது, கலெக்ஷன் எப்படி, கேபிள் டிவியை எப்படி சமாளிக்கிறேஎன்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம்.

பி.கு: ரஜினியிடம் தனிச் செயலாளராக இருந்த ஜெயராம் என்பவர்தான் இப்போது விஜய்யின் தனிச் செயலாளர் என்பது தெரியுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil