»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கப் போகும் நிலையில் இன்னொரு ஜோடியாக ஐஸ்வர்யா ராயைநடிக்க வைக்க தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.

இத் தகவலை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் சந்திரமுகியை பி.வாசு இயக்க உள்ளது தெரிந்த விஷயமே. இப்போது கதைடிஸ்கஷன் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தை வாங்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வினியோக உரிமையை காதும் காதும் வைத்த மாதிரி மாபெரும் விலைக்கு விற்றிருக்கிறது சிவாஜிபுரொடக்ஷன்ஸ் நிறுவனம்.

படத்தின் தமிழக உரிமையை மட்டும் சிவாஜி புரொடக்ஷனுக்குத் தந்துள்ள ரஜினி, இதன் ஆந்திரா, கர்நாடகாமற்றும் ஜப்பான் ரிலீஸ் உரிமையை தானே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந் நிவையில் படத்தின் ஆந்திரா ரைட்ஸ் கோரி வினியோகஸ்தர்கள் படையெடுத்துள்ளார்கள். ரூ. 10 கோடி வரைவிலை கொடுக்க அவர்கள் முன் வந்தாலும், திருப்பி அனுப்பிவிட்டதாம் ரஜினி மற்றும் பிரரு தரப்பு. படத்துக்குஆந்திராவில் இதைவிட நல்ல விலை விலை கிடைக்கும் என நம்புகிறார்களாம்.

ஆந்திராவிலேயே இந்த விலை என்றால் தமிழகத்தில் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்ன விலைக்குவிற்றிருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இதனால் தான் ரஜினிக்கு ரூ. 11 கோடியை லம்ப் ஆகசம்பளமாகத் தர முன் வந்துவிட்டார்களாம்.

ஆந்திரா, கர்நாடகா, ஜப்பான் வினியோக உரிமை மூலம் இதைப் போல இன்னொரு மடங்கு பணத்தை ரஜினிஈட்டிவிடுவாராம். ஆக, மொத்தத்தில் இந்தப் படத்தால் ரஜினிக்கு பெரிய ரூபா 20ம் பிரபு தரப்புக்கும் அதற்குஇணையான வருமானமும் நிச்சயம் என்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு கடந்த 10ம் தேதியே தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் அடுத்த மாதத்துக்குத் தள்ளிப்போனது கூட ஐஸ்வர்யாவின் வரவுக்காகத் தான் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நடிகர் பிரபு கூறுகையில்,

சிம்ரன் ஒரு ஹீரோயினாக புக் செய்யப்பட்டுவிட்டார். இன்னொரு ஹீரோயின் ரோலுக்கு ஐஸ்வர்யா ராயிடம்பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது அவர் லண்டனில் இருக்கிறார். மும்பை திரும்பியதும் அவரை சந்தித்துப்பேசுவோம். அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாத பட்சத்தில் வேறு ஹீரோயினைப் போடுவோம் என்றார்.

1954ம் ஆண்டு அமர்தீப் என்ற இந்திப் படத்தைத் தயாரித்த சிவாஜ் புரொடக்ஷன்ஸ், பின்னர் பத்மினி, சிவாஜிநடிக்க வியட்நாம் வீடு படத்தைத் தான் முதலில் தமிழில் தயாரித்தது. கடைசியாக படம் எடுத்தது 12ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது இந்த நீண்ட பிரேக்கை உடைத்துக் கொண்டு சந்திரமுகியை தயாரிக்கிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தினபெரும்பாலான சூட்டிங் ஜெய்ப்பூர், குவாலியர், ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாம்.

ஐஸ்வர்யா நடிக்க ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் பாலிவுட் செக்ஸ் பாம் மல்லிகா ஷெராவத் இழுக்கப்படுவார் என்றுபேசிக் கொள்கிறார்கள்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil