For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  சந்திரமுகியில் இதுவரை இல்லாத புதுவித கெட்-அப்பில் நடிக்கப் போகிறாராம் ரஜினி.

  கதை என்னுது உன்னுது என்று கேரளத்தின் பக்கமிருந்து சந்திரமுகிக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு வந்து கொண்டிருந்தாலும் அதை ஒரு பக்கம்ஒதுக்கி வைத்துவிட்டு சூட்டிங்கில் பரபரப்பாகிவிட்டார் ரஜினி.

  கதை உரிமை பிரச்சனை ஓயும் வரை பாடல் காட்சிகளை மட்டுமே சுட்டித் தள்ளுவோம் என்ற முடிவில் இருந்தார் ரஜினி. பின்னர் ஆனதுஆகட்டும், சமாளிப்போம் என்று சொல்லி சூட்டிங்கை விரைவுபடுத்திவிட்டார்.

  சென்னையில் மெகா செட்டிலும் பெங்களூர் மற்றும் மைசூரிலும் படப்பிடிப்பு வேகமாய் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில்ரஜினியின் ஸ்டில்கள் என்று சில பாடல் காட்சி படங்கள் மட்டும் வெளியில் வந்தாலும், கமுக்கமாக சில விஷயங்கள் அரங்கேறிவருகின்றனவாம்.

  படத்தில் ரஜினியின் கெட்-அப் மிக வித்தியாசமாக உள்ளதாம். தலையில் சின்னதாய் ஒரு குடுமி, தடையில் குட்டியாய் ஒரு தாடி என்றுமாறுபட்ட வேடம் போட்டுள்ளாராம் ரஜினி. மனோத்துவ நிபுணர் என்பதற்கேற்ப மெச்சூரிட்டியை கூட்டும் விதத்தில் போடப்பட்டுள்ளதாம்இந்த மேக்-அப்.

  இதைப் போட்டது கூட ஒரு வெளிநாட்டு மேக்-அப் மேன் தானாம். இந்த புதிய லுக் குறித்து வெளியில் படமோ செய்தியோகசிந்துவிடாமல் மிக ஜாக்கிரதையாக இருக்கிறார் ரஜினி. எப்படியோ செய்தி லீக் ஆகிவிட்டது. படமும் விரைவில் வரும்.. பார்ப்போம்...

  இதற்கிடையே ஜக்குபாயை கைவிட்டதோடு சொந்தபடத் தயாரிப்புக்கே முழுக்குப் போட முடிவு செய்துவிட்டார் ரஜினி என்கிறார்கள்.இனிமேல் வெளியார் படங்களில் நடித்து, தலைக் குடைச்சல் ஏதும் இல்லாமல் நிம்மதியாய் பணம் ஈட்டுவது என்ற மூடுக்குவந்துவிட்டாராம்.

  சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் சந்திரமுகியைத் தொடர்ந்து அடுத்து, ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகன் தயாரிக்கும் ஒருபடத்தில் நடிக்கம் சம்மதம் சொல்லி இருக்கிறாராம் ரஜினி.

  இந்தப் படத்தை மோகனின் இன்னொரு மகனான ("ஜெயம் இயக்குனர்) ராஜா.

  "மிட்டு"வுக்கு மாப்பிள்ளை தேடும் ரஜினி:

  இந் நிலையில் ஐஸ்வர்யாவின் கல்யாணத்தை முடித்த கையோடு தனது இரண்டாவது மகளான செளந்தர்யா(ரஜினி இவரைக் கூப்பிடுவது மிட்டு என்று தான்)கல்யாணத்தையும் விரைவில் முடித்து விட ரஜினி தீர்மானித்து விட்டாராம்.

  ஐஸ், தனுஷுடன் செட்டிலாகி விட்டார். இதைத் தொடர்ந்து செளந்தர்யாவைப் பெண் கேட்டு மிகப் பெரிய இடங்களில் இருந்தெல்லாம் வரண்கள் வரத்தொடங்கியுள்ளதாம். முதலில், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தான் ரஜினி நினைத்தாராம்.

  அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சட்டுப் புட்டென்று செளந்தர்யா கல்யாணத்தையும் முடித்து விட தீர்மானித்துள்ளர்.

  இதனால் செளந்தர்யாவின் ஜாதகம் எட்டுத் திக்குகளிலும் அனுப்பி நல்ல மாப்பிள்ளையைத் தேடிச் சொல்லுமாறு தனக்கு நெருக்கமானவர்களிடம்கூறியுள்ளாராம்.

  வெளிநாடு, உள்நாடு என பல வரன்களும் ஜாதகங்களும் குவிந்து கொண்டிருக்கின்றனவாம். லதா தான் இவற்றை பரிசீலனை செய்து வருகிறாராம்.

  விரைவில் செளந்தர்யாவுக்கும் வரன் செட்டாகி விடும் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X