»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மனைவி லதாவுடன் சென்றுசந்தித்து ஐஸ்வர்யா திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.

போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு இரண்டு தெரு தள்ளியுள்ளது ரஜினியின் வீடு. ரஜின் பட்டு வேட்டிசட்டையிலும் லதா பட்டுச் சேலையிலும் தகதகக்க இன்று காலை திடீரென ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்தனர்.

தங்கள் மகள் ஐஸ்வர்யா-தனுஷ் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினர். சிறிது நேரம் பேசிவிட்டு

அடுத்ததாக கோபாலபுரம் வந்தனர். அவர்களை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வரவேற்று அழைத்துச் சென்றார்.

இருவரும் கருணாநிதியிடம் அழைப்பிதழைத் தர, மிக மகிழ்ச்சியுடன் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜெவை சந்தித்தார் தனுஷ்:

அதே போல தனுஷ் தனது தந்தை கஸ்தூரிராஜா மற்றும் தாயார் விஜயலட்சுமியுடன் இன்று ஜெயலலிதாவின் இல்லத்துக்குச் சென்றுதிருமண அழைப்பிதழை வழங்கினார்.

ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் நாளை மறுதினம் (18ம் தேதி) காலை 10.30 மணிக்கு ரஜினியின் வீட்டில் எளிமையாக நடக்கிறது.20ம் தேதி சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடக்கிறது.

திருமணத்தை ரஜினி எளிமையாக நடத்த இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil