»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படத்தின் கதை பற்றிய பிரச்சனை முடிவுக்கு வராமல் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பாபா தோல்விக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் சந்திரமுகி. இது சிவாஜி பிலிம்ஸின் 50வது ஆண்டு தயாரிப்பு. அதுமட்டுமல்ல இந்தப்படத்தை இயக்கும் பி.வாசுவுக்கு இது 50வது படம். இன்னொரு விஷேசம் பி.வாசுவுக்கும் 50 வயது.

இத்தனை ஸ்பெஷல்களோடு சூட்டிங் சென்று சந்திரமுகி குழு இப்போது கதை உரிமை பற்றிய பிரச்சினையில் சிக்கித் திண்டாடுகிறது.

மலையாளத்தில் வெளியான மணிசித்ரதாழ் படத்தின் தழுவல்தான் சந்திரமுகி என்றும் படத்தின் உரிமையை வாங்காமல் பி.வாசுபடமெடுத்து வருகிறார் என்றும் மணிசித்ரதாழ் படத்தின் கதாசிரியர் மாது முட்டம் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையில் புகார்கொடுத்துள்ளார்.


ஆனால் பி.வாசு இது தனது சொந்தக் கதைதான் என்ற பல்லவியை விடாமல் பாடி வருகிறார்.

சந்திரமுகி படத்தின் கதை பற்றிய பிரச்சனை தீரும்வரையில் கேரளாவில் இப்படத்தை திரையிட மலையாளத் திரையுலகம் தடைவிதித்துள்ளது. இதனால் நஷ்டம் ரஜினிக்குத் தான். தனது சம்பளத்தில் ஒரு பகுதியாக கேரள வினியோக உரிமையை சூப்பர் ஸ்டார்வாங்கியிருக்கிறார்.

சுமார் ரூ. 1 கோடி வரை லாபம் ஈட்டித் தரும் ஏரியா இது. இதனால் பிரச்சனையை மலையாள திரைப்பட வர்த்தக சபையுடன் பேசித்தீர்க்குமாறு பி.வாசுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. மலையாளத் தரப்பில் இருந்து மணிச்சித்ரதாழ் படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன்பேச இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ரஜினி மிக உஷாராக இருப்பதாகத் தெரிகிறது. பிரச்சனை தீரும் வரையில் முக்கிய காட்சிகளை விட்டுவிட்டு ஆடல்,பாடல், ஜோக், சண்டை ஆகிய காட்சிகளை மட்டும் படமெடுத்து வருகிறார்கள்.


சந்திரமுகிக்காக குஷால்தாஸ் கார்டனில் ஒரு அரண்மனை செட் போடப்பட்டு உள்ளது. கதை அரண்மனையைச் சுற்றி நகரும் கதையாம்.

பாபா படம் மாதிரியே அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வடிவேலுவுக்கு படத்தில் செம வெயிட்டான ரோலாம். மனிதர் காமெடியில் பின்னியிருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர். காமெடிநன்றாக வருவதைப் பார்த்து வடிவேலுவிற்கு மேலும் சில காட்சிகளைச் சேர்க்கச் சொல்லியிருக்கிறாம் ரஜினி.

குஷால்தாஸ் கார்டனில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தியவர்கள் டிசம்பர் 14லிருந்து 19ம் தேதி வரை பெங்களூரில் படப் பிடிப்பைநடத்தி முடித்திருக்கிறார்கள்.


இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பின்பு மறுபடியும் குஷால்தாஸ் கார்டனுக்குவருகிறார்கள். அடுத்த மாத இறுதியில் ஹைதராபாத்திலும், திருவனந்தபுரத்திலும் படப்பிடிப்பு நடத்திகிறார்களாம்.

வயது ஏறிவிட்டாலும் ரஜினியின் சுறுசுறுப்பு இன்னும் குறையவில்லை என்று படப்பிடிப்புக் குழுவினர் கூறுகிறார்கள். அவரது வேகத்திற்குஈடுகொடுக்க முடியாமல் பி.வாசு திணறுகிறாராம்.

படத்தில் நாயகி நயனதாரா ஒரு பாட்டு வாத்தியார். அரண்மனைக் காவலாளியின் மகனாக நடிக்கிறார். அரண்மனை உரிமையாளராகசெம்மீன் ஷீலா நடிக்கிறார்.


பாடல்கள் அனைத்தும் சூப்பராக வந்துள்ளதாம். ரஜினி-நயனதாரா காம்பினேஷனில் ஒரு பாடலை மைசூர் அரண்மனையிலும் மற்றொருபாடலை வெளிநாட்டிலும் படமெடுக்கவுள்ளனர்.

படத்தின் கதை பற்றிய பிரச்சனை நீடித்து வந்தாலும் அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்றுப்போனதாக சிவாஜி

படத் தயாரிப்பு வேலைகளை ராம்குமாரும், சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி படுதோல்வியடைந்த அவரது மகன் துஷ்யந்தும்நேரடியாக கவனிக்கின்றனர். மகன் நடிப்பில் தேறாததால் தயாரிப்புத் துறையில் அவரை தயார்படுத்தி வருகிறார் தந்தை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil