»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிக்கும் சந்திரமுகியில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை. ரஜினிக்கு ஜோடியாக வேறு நடிகைநடிக்கவுள்ளார்.

சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான சந்திரமுகியில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். பி.வாசு படத்தைஇயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. சிவாஜி பிறந்த நாளன்று படத்திற்குபூஜை போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் பூஜை நடைபெறவில்லை. புரட்டாசி மாதம் முடிந்ததும் பூஜை போடப்படும் என்றுகூறப்பட்டது.

இந் நிலையில் இப்படத்திற்கான பூஜை சிவாஜி கணேசனின் சென்னை தி.நகர் வீட்டில் எளிமையாக நடந்தது.

ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், நெப்போலியன், விஜயகுமார், நாசர், தியாகு, ஜெயம் ரவி, சிபிராஜ், ஜீவா, வடிவேல்,ஒய்.ஜி.மகேந்திரன், பிரதாப் போத்தன், அலெக்ஸ், ஜெயராம், ராஜா, சின்னிஜெயந்த், ராதிகா, மனோரமா,

இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, சி.வி. ராஜேந்திரன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார்,ராஜ்கபூர், ஆர். சுந்தர்ராஜன், ராமநாராயணன், என்.கே.விஸ்வநாதன், சந்தான பாரதி, ஷக்தி சிதம்பரம்,டி.பி.கஜேந்திரன், எடிட்டர் மோகன்,

தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், முரளிதரன், இப்ராகிம் ராவுத்தர், சித்ரா லட்சுமணன், பஞ்சு அருணாசலம்,பிரமிட் நடராஜன், துரை, புஷ்பாகந்தசாமி, மோகன் நடராஜன், டி.என்.சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், ராம்குமார், பிரபு இருவரிடமும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

பூஜைக்கு முன்பாக சிவாஜியின் மனைவி கமலா அம்மாளை ரஜினி சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.அவருக்கு கமலா அம்மாள் பொட்டு வைத்து ஆசி வழங்கினார்.

பின்னர் பூஜை நடந்தது. பூஜைக்குப் பின்னர் ரஜினியை நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் பலர் வாழ்த்தினர்.பின்னர் ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், படப்பிடிப்பு நாளையே (இன்று) தொடங்குகிறது. எனக்கு ஜோடியார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று கூறினார்.

ரஜினி புறப்படத் தயாரான போது நடிகர் கமல் வந்தார். பின்னர் இருவரும் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துக்களைஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொண்டனர். இருவரும் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

அதனையடுத்த ரஜினி புறப்பட்டுச் சென்றார். கமல் நீண்ட நேரம் சிவாஜி குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் பிரபு விலாவாரியாக பேசுகையில், இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை. ரஜினி சார் தவிர நான்,சிம்ரன், நயன்தாரா, விஜயக்குமார், வடிவேலு, நாசர் ஆகியோர் படத்தில் உள்ளோம்.

விஜயதசமி என்பதால் பூஜை இன்றே (சனிக்கிழமை) போடப்பட்டது. படப்பிடிப்பை சென்னை அல்லதுஐதராபாத்தில் தொடங்குகிறோம். படத்திற்கு வித்யாசாகர் இசை அமைக்கிறார்.

ரஜினிக்கு இந்தப் படத்தில் சரவணன் என்று பெயர் சூட்டியிருக்கிறோம். மிகவும் ஜாலியான படமாக இது இருக்கும்.அனைவரையும் கவரும் விதமாக கதையை பி.வாசு அமைத்துள்ளார் என்றார் பிரபு.

பி.வாசு நிருபர்களிடம் பேசியபோது, இந்த படம் ராஜாதி ராஜா மாதிரி ஜாலியான பொழுதுபோக்கு படமாகஇருக்கும். ரஜினியின் ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

80 சதவீதம் அது புதுமுக இருக்க வாய்ப்புள்ளது. மாளவிகா, ஷீலா ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் வில்லன் கிடையாது. பாடல்களை பல கவிஞர்கள் எழுதுகிறார்கள். பாடல் கம்போசிங் தற்போதுநடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

நாளை ஹைதராபாத்தில் தொடங்கும் படப்பிடிப்பில் முதலில் சண்டைக் காட்சி எடுக்கப்படுகிறது. அதில்ரெளடிகளுடன் மோதுகிறார் ரஜினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil