»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படத்தில் மனோதத்துவ டாக்டராக நடிக்கப் போகிறார் ரஜினி.

ஜக்குபாய் படத்தை விட்டுவிட்டு சந்திரமுகிக்கு ரஜினி தாவியது ஒரு சுவாரஸ்மான கதை.

மக்களவைத் தேர்தலில் தனது வாய்ஸூக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து, மன நிம்மதி தேடி கர்நாடகாவில் உள்ளபுண்ணிய தலங்களுக்கு ஷேத்திராடனம் செய்தார் ரஜினி.

அப்போது கர்நாடகத்தில் படு ஹிட்டாக ஒடிக் கொண்டிருந்த அப்தமித்ரா என்ற படத்தைப் பார்த்திருக்கிறார்.விஷ்ணுவர்தனும், செளந்தர்யாவும் (செளந்தர்யாவின் கடைசிப்படம்) நடித்திருந்த அந்த படம் அவரைவெகுவாகக் கவர்ந்தது.

கன்னடத்தில் இவ்வளவு நல்ல ஒரு படமா என்று ஆச்சரியப்பட்டவர் அதைப் பற்றி விசாரித்தபோது, அது ஒருரீமேக் படம் என்பது தெரிந்திருக்கிறது.

மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாசில் இயக்கத்தில் வெளிவந்த மணிச்சித்திர தாழில் என்ற படம்சிறந்த பொழுதுபோக்குப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனாஆகியோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

எந்த மொழியில் எந்தப் படம் ஹிட் ஆனாலும் அதை ரீமேக் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் கன்னடதிரையுலகினர் இந்தப் படத்தையும் விட்டு வைக்கவில்லை. நம்ம ஊர் மசாலா பட இயக்குநர் பி.வாசுவைப் பிடித்துஅபதமித்ராவை இயக்கச் சொல்லிவிட்டார்கள். மணிச்சித்திர தாழ் படத்தை, கொஞ்சமும் மாற்றாமல், அப்படியேவாசு மசாலா அரைக்க, கன்னடத்திலும் படம் சூப்பர் ஹிட்.

காமெடி, திரில்லர் என்று படம் செம காக்டெயிலாக இருந்ததால், படத்தைப் பார்த்த ரஜினி ஜக்குபாயைநிறுத்திவிட்டு இதில் இறங்கத் தீர்மானித்தார்.

ஜக்குபாய்க்காக மற்ற வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு, கதை விவாதத்தில் ஈடுபட்ட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரைசமாதானப்படுத்தும் விதமாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரஜினி விருந்து வைத்தாராம். அப்போது அடுத்துஉங்களுடைய டைரக்ஷனில் நடிக்கிறேன் என்று உறுதி தந்திருக்கிறாராம்.

இதையடுத்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் ராம்குமாரை தொடர்பு கொண்டு படத்தின் அவுட் லைனைச் சொல்லி அதைநீங்கள் தயாரிக்கத் தயாரா என்று கேட்க, ரஜினியே நடிப்பதால் உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்ராம்குமார். இதையடுத்து பி.வாசுவைக் கூப்பிட்டு அவரையே தமிழிலும் இயக்கவும் சொல்லிவிட்டாராம் ரஜினி.

சரி, படத்தின் கதைதான் என்ன?

ஒரு நகரத்தில் பிரபல மனோதத்துவ டாக்டர் இருக்கிறார். அவருக்கு உளவியல் தொடர்பான எல்லாவிதநோய்களையும் குணப்படுத்தும் திறமை உண்டு. அந்த டாக்டரிடம் அவரது நண்பர் ஒருவர் வருகிறார். தனதுமனைவிக்கு விசித்திரமான நோய் என்றும், யாரையாவது பார்த்தால் அவரைப் போலவே பேசுகிறாள், நடை உடைபாவனைகளை மாற்றிக் கொள்கிறாள் என்றும் அவளை நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

அந்தப் பெண்ணை டாக்டர் எப்படி குணப்படுத்துகிறார் என்பதுதான் கதை.

மனோதத்துவ நிபுணராக ரஜினியும் அவரது நண்பராக பிரபுவும் (சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஆச்சே) நடிக்கிறார்கள்.வசூல்ராஜாவில் போலி டாக்டர் கமலுக்கு நண்பராக வந்தவர் இதில் சைக்காலஜிஸ்ட் ரஜினிக்கு நண்பராகநடிக்கிறார்.

படத்திற்கு இசை வித்யாசாகர். ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சிம்ரனில் ஆரம்பித்து ஜோதிகா, ஸ்னேகா, ராணிமுகர்ஜி, சோனாலி பிந்த்ரே என்று பல பேரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவரை ரஜினி இறுதிசெய்வார்.

பிரபுவுக்கு ஜோடியாக ரீமா சென்னாம். இந்தப் படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் என்ன என்பது தான் இப்போதுகோடம்பாக்கத்தில் முக்கிய பிரச்சனையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ரூ. 4 கோடியில் பாபா படத்தைத் தயாரித்த ரஜினி அதை ரூ.50 கோடிக்கு விற்றார். உடனேஇன்கம்டாக்ஸ்காரர்களுக்கும் தகவல் போய்ச் சேர, அவர்களுக்கு விளக்கம் கொடுத்து வரியையும் செலுத்தினார்.

ஆனால் படம் வரலாறு காணத பிளாப் ஆனதால் படத்தை வாங்கிய தியேட்டர்காரர்களுக்கு ரஜினி ரூ.25 கோடிவரை திருத்தித் தந்துவிட்டார். தயாரிப்புச் செலவு போக ரஜினிக்கு லம்ப் ஆக ரூ.21 கோடி வரை சம்பளக் கணக்கில்வரவானது.

இப்போது சந்திரமுகியைத் தயாரிக்கும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் ரஜினிக்கு குறைந்தபட்சம் இந்த ரூ. 20கோடியையாவது தந்தாக வேண்டும். ஆனால், ரஜினி தரப்பில் ரூ.25 கோடி வரை சம்பளம் கேட்கப்படுவதாககோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.

யப்பாடியோவ் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil