»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

15 வருடமாக கடுமையாகப் போராடி தொடர் வெற்றிகள் மூலம், விக்ரம் மக்கள் மனதை வென்று, சினிமாவிலும்ஜெயித்து விட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

விக்ரம் நடித்து, கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த சாமி படத்தின் 125-வது நாள் விழாசென்னையில் நடந்தது. காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாலச்சந்தர், சாமி தயாரிப்பாளரும் பாலசந்திரின் மகளுமான புஷ்பா கந்தசாமி,இயக்குனரும் நடிகர் விஜய்குமாரின் மருமகனுமான ஹரி, நடிகர்கள் விஜய், சூர்யா, விவேக், கோட்டாசீனிவாசராவ், நடிகை திரிஷா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாமி படக் கலைஞர்களுக்கு கேடயங்களை வழங்கி ரஜினி பேசியதாவது:

படையப்பா படத்துக்குப் பின் ஒரு சினிமா வெற்றி விழாவில் இப்போது தான் கலந்து கொள்கிறேன். சாமி படத்தைநீங்கள் பார்க்க வேண்டும் என்று விஜய்குமார் சொன்னார். பார்த்தேன். ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரேவிறுவிறுப்பு. டொம்போ எங்கேயுமே குறையலை.

இந்தப் படத்தில் ஒரு சாமி, இரண்டு சாமி, மூனு சாமி, நாலு சாமி, அஞ்சு சாமி, ஆறுசாமி என்று விக்ரம் வேகமாககூறிப் பேசுவதைப் பார்த்தபோது, அடடா, நாம் இப்படி செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

இந்தப் படத்தில் வில்லனை வித்தியாசமாக பழி வாங்குகிறார் ஹீரோ. அதாவது, கெட்டவனை தந்திரம் செய்துஅழிக்கிறார். அதாவது கிருஷ்ண பரமாத்மா மாதிரி. எங்கு அக்கிரமம் நடக்குமோ அங்கு தோன்றுவேன் என்றுகீதையில் கூறியிருக்கிறார் கிருஷ்ணர். பத்து பேருக்கு, ஆயிரம் பேருக்கு நல்லது நடக்கும்னா, கெட்டவங்களைதந்திரம் செய்து அழிக்கலாம்.

அதில் தப்பேயில்லை. அந்த டெக்னிக்கை சாமி படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார்கள். இயக்குனர் ஹரி மிகஅழகா கதையை கையாண்டிருக்கிறார்.

ஆனால், விக்ரம் 10 வருடம் ரொம்பக் கஷ்டப்பட்டு ஜெயித்திருக்கிறார். அந்த கடுமையான போராட்டத்தின்விளைவாக இப்போது அவர் ஸ்டார் ஆகியிருக்கிறார். பாலசந்தர் சார் எனக்கு ஆரம்பத்திலேயே கிடைத்துவிட்டார்,அதனால் ஸ்டார் ஆயிட்டேன்.

சேதுவில் தன்னை அடையாளம் காட்டினார். தில் மூலம் 20 சதவீத மக்கள் அவருக்கு ரசிகர்கள் ஆனார்கள்.காசியில் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபித்தார். ஜெமினியில் அவரது மாஸ் 40 சதவீதம் ஆனது.

தூள் படத்தின் மூலம் 60 சதவீத மக்களை வசீகத்தார். சாமி மூலம் 100 சதவீத மாஸையும் தன்வசப்படுத்தி விட்டார்.

நல்ல படங்கள், கேரக்டர்கள் கிடைத்தால்தான் சூப்பர் ஸ்டாராக முடியும். எனக்கு அண்ணாமலை, முத்து, பாட்ஷா,படையப்பா, வேலைக்காரன் என நல்ல படங்களும், கேரக்டர்களும் கிடைத்தன. இன்று அது விக்ரமுக்குக் கிடைத்துவருகிறது.

அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இன்னும் நிறைய நல்ல படங்களைச் செய்வார்.

சூப்பர் ஸ்டார் பதவி எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அந்தந்த கால கட்டத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பார்.அது நிரந்தரமான பதவி அல்ல. யாருடைய படத்தை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்களோ, யாருடைய படத்திற்குஅதிக வசூல் கிடைக்கிறதோ, யாருடைய படங்கள் நன்றாக ஓடுகிறதோ அவர்தான் சூப்பர் ஸ்டார்.

எனக்கு எதிரி யாரும் கிடையாது, நான் தான் எனக்கு எதிரி. நண்பனும், நானே, எதிரியும் நானே.

படையப்பாதான் எனக்கு இப்போது போட்டி. அதை விட நல்ல படம் செய்யனும். நல்ல கதை, உங்களுக்கும்,எனக்கும் பிடிக்கிற மாதிரி கிடைத்தால் அடுத்த படம் நச்சயம் செய்வேன் என்றார் ரஜினி.

இங்கே வந்திருக்கும் விஜய் நேரில் பார்ப்பதற்கு ஒரு மாதிரி அமைதியாக இருக்கிறார். ஆனால், ஸ்கிரீன்ல புதுஅவதாரமே எடுத்திடுறார்.

காக்க.. காக்க படத்தை மாறு வேஷத்துல போய் தியேட்டர்ல பார்த்தேன். ஒரு ஐபிஎஸ் ஆபிஷர் எப்படி இருக்கனும்அப்படிங்கிறத பிசிக்கலா மட்டுமில்லாம, பாடி லாங்க்வேஜ்லயும் காட்டியிருக்கிறார் சூர்யா என்று படு ஜாலியாகவும்விஷய ஞானத்துடனும் பேசினார் ரஜினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil