Just In
- 1 min ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 11 min ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
- 1 hr ago
என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
- 1 hr ago
வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி! - ஷாரூக் கண்ணீர்
யார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகரில்லை.
திரையுலகில் தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும், ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் பெரியது.
ரஜினி ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷாரூக்கான் அந்த 'ரோபோ' என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு செய்தார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில் வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில்.
ஆனால் படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விஷயம்.
இன்று அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டில் எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு யாரும் ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்!), மும்பைக்குப் பயணம் செய்து நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று சொல்வீர்கள்!
ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப் போக வைத்துவிட்டது.
இதுகுறித்து தனது ட்விட்டரில், "மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார் செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த நாள், ரஜினி நடித்துக் கொடுத்த காட்சியை தனது எடிட் ஸ்டுடியோவில் போட்டுப் பார்த்து பிரமித்துப் போனாராம் ஷாரூக்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சாரின் காட்சிகளைப் பார்த்தேன். ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வாவ்! (Sitting with soundarya & seeing the edit of rajini sir's shoot.he is like a celestial being...the whole office is beaming with happiness.WOW) என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி உங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி," என்றார்.