»   »  பேரன் பிறந்த நாள்- ரெடியாகும் ரஜினி!

பேரன் பிறந்த நாள்- ரெடியாகும் ரஜினி!

Subscribe to Oneindia Tamil

தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் யாத்ராவின் முதலாமாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி தாத்தா ரஜினிகாந்த் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறாராம். ஸ்டார் ஹோட்டலில் உற்றார், உறவினர், நண்பர்கள் புடை சூழ பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவுள்ளனராம்.

Click here for more images
நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா என்ற மகன் உள்ளார். இவருக்கு நாளையுடன் ஒரு வயது முடிவடைகிறது.

இதையொட்டி பேரன் யாத்ராவின் முதலாவது ஆண்டு பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துள்ளார் ரஜினிகாந்த். ரஜினிக்கு யாத்ரா மீது மிகுந்த பிரியம். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் யாத்ராவுடன்தான் அதிக நேரம் செலவிடுவார் ரஜினி.

இதனால் தனது பாசத்துக்குரிய பேரனின் முதலாம் பிறந்த நாளை கிரேட் ஆக கொண்டாடத் தீர்மானித்த ரஜினி, இதற்காக ஸ்டார் ஹோட்டலில் கிராண்ட் விருந்துக்கும், கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

உற்றார், உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு இதற்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறதாம். ரஜினி குடும்பம் மற்றும் தனுஷ் குடும்பத்தினர் இணைந்து பிறந்த நாள் ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.

மகன் பிறந்த நாளன்று படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டுள்ளாராம் தனுஷ். அன்று முழுவதும் மகனுடன்தான் இருக்கப் போகிறாராம்.

ஹேப்பி பர்த் டே டூ யாத்ரா!

Read more about: rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil