»   »  இந்தியில் வெளியாகிறது ரஜினியின் மெகா ஹிட் பாட்ஷா !

இந்தியில் வெளியாகிறது ரஜினியின் மெகா ஹிட் பாட்ஷா !

Posted By:
Subscribe to Oneindia Tamil
Basha
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படமான பாட்ஷா இந்தியில் புதுப் பொலிவுடன் வெளியாகிறது.

5.1 ஒலித் தரம் மற்றும் முற்றிலும் டிஜிட்டலில் மாற்றப்பட்டுள்ள இந்தி பாட்ஷாவின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் ஆர்வத்துடன் பத்தாயிரம் வாலா சரவெடியைக் கொளுத்தி சாலிகிராமத்தை அதிர வைத்தனர். டிஜிட்டலில் புதுப் பொலிவுடன் உருவாகியுள்ள இந்தி பாட்ஷாவை, பத்ரகாளி மூவீஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.

படத்தின் இசையமைப்பாளர் தேவா, ட்ரெயிலர் வெளியீட்டுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும், படத்தையும் போட்டுக் காட்டினார்கள். இதில் டைட்டில் காட்சிகள் மட்டும் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு தனியாக இசையை சேர்த்துள்ளனர்.

படத்தின் வண்ணம் மிகத் துல்லியமாக, புத்தம் புதிய படம் போல உள்ளது. குறிப்பாக டப்பிங் பண்ணப்பட்ட விதம் அருமை (ரஜினிக்கு இன்னும் கூட பொருத்தமான குரலை தேர்ந்தெடுத்திருக்கலாம்).

பாடல்கள் அனைத்துமே ஒரிஜினல் பாடல்கள் போல மாற்றப்பட்டுள்ளன (இந்த வேலை சில ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதாக நினைவு). அதிலும் எஸ்பிபி குரலில் மே ஆட்டோவாலா, ரா ரா ராமையா அசத்தலாக வந்திருக்கிறது.

உலகமெங்கும் இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 20-ம் தேதி வெளியிடுகிறார்கள். அதற்கு முன் படத்தை ரஜினிக்கும் திரையிட்டுக் காட்டுகின்றனர்.

Read more about: rajini, baasha, ரஜினி
English summary
Rajini's mega blockbuster Baasha is going to release worldwide on April 20, 2012.
Please Wait while comments are loading...