»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரஜினியின் ஜக்குபாய் கதை விவாதம் பாதியில் திடீரென நிறுத்தப்பட்டு, அந்தரத்தில் விடப்பட்டநிலையில், அந்தப் படம் அடுத்த நிலைக்கு நகருமா என்பதே இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.

படப்பிடிப்பு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று பல மாதங்கள் பின் தள்ளப்பட்டு இப்போது அடுத்தஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.

கதாநாயகியாக ஐஸ்வர்யாவே நடிக்க வேண்டும் என்று ரஜினி விரும்புவதால், அவரது கால்ஷீட்அட்ஜஸ்ட்மெண்ட்டுக்காக படப்பிடிப்பு தள்ளிப் போனதாக முதலில் சொல்லப்பட்டது.

ஐஸ்வர்யா ரொம்பவே பிஸி என்பதாலும், அவர் மிகவும் பிகு செய்வதாலும் பூமிகாவைஹீரோயினாக்கி செப்டம்பரில் சூட்டிங்கைத் தொடங்கிவிடலாம் என இயக்குனர் ரவிக்குமார்யோசனை சொல்ல பூமிகாவிடம் கால்ஷீட் பெறப்பட்டது.

இந் நிலையில் திடீரென கதை விவாதத்தையே நிறுத்தச் சொல்லிவிட்டார் ரஜினி. பெங்களூரில்வைத்து ஸ்கிரிப்ட் பில்ட்-அப்பில் இருந்த கே.எஸ்.ரவிக்குமாரும், ரமேஷ் கண்ணா உள்ளிட்டஅவரது அசிஸ்டெண்ட்களும் அந்தப் பணியை அப்படியே நிறுத்திவிட்டனர். (இப்படி ஜக்குபாய்கதை விவாதம் நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்)

இப்போதைக்கு நேரம் சரியில்லை என்பதால், பூஜை புனஸ்காரங்கள், ஆலய வழிபாடுகளைமுடித்துவிட்டு சூட்டிங்கை ரஜினி தொடரத் திட்டமிட்டுள்ளதாக, கதை விவாத நிறுத்தத்துக்குக்காரணமும் சொல்லப்பட்டது.

இது இப்படி இருக்க தில், தூள், கில்லி என சொல்லி வைத்து வரிசையாக ஹாட்ரிக் வெற்றிப்படங்களைத் தந்துள்ள தரணி திடீரென ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளாராம். ரஜினியின்அழைப்பின் பேரிலேயே இச் சந்திப்பு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.

கே.எஸ்.ரவிக்குமாரை கழற்றிவிட்டு, தனது அடுத்த படத்தை தரணியை வைத்து ரஜினி எடுக்கப்போவதாக கோடம்பாக்கததில் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே ரெடியான ஜக்குபாய் கதையைதரணியிடம் ரஜினி கூறியதாகவும், அதையே கொஞ்சம் மாற்றி எடுக்கலாம் என தரணி யோசனைசொன்னதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் ரஜினிக்காக புதுக் கதை ஒன்றையும் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம் தரணி.

கே.எஸ்.ரவிக்குமார் தரப்பில் கேட்டால், ஜக்குபாய் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில்தொடங்கும் என்று செய்தி கசிய விடுகிறார்கள். இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால், தரணியைவைத்து ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அப்புறமாக ஜக்குபாய் பக்கமாக ரஜினி வரலாம் என்றுதெரிகிறது.

Read more about: cinema, dharani, film, movie, music, rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil