»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

வரும் 12ம் தேதி தங்களுக்கும் தமிழகத்துக்கும் மிக முக்கிய அறிவிப்பைத் தருவார் ரஜினி என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் அடுத்த மாதம் 12ம் தேதி வருகிறது. அன்று தாங்கள் எதிர்பார்க்கும் செய்தியை ரஜினிவெளியிடுவார் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் இப்போதே அடிபடத் தொடங்கி விட்டது.

காவிரிப் பிரச்சினையில் ரஜினியின் தலை உருண்ட அளவுக்கு வேறு யாருடைய தலையும் உருட்டப்பட்டிருக்காது.அதற்குக் காரணம் அவர் பிறந்த கர்நாடகத்தால், தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுதான்.

பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்காக தமிழகமே ஒன்று திரண்டு குரல் கொடுத்த வேளையில், ரஜினியின் தரப்பில்காணப்பட்ட மாபெரும் மவுனம், தமிழர்களை உசுப்பி விட்டு விட்டது. அதற்குக் காரணம் பாபா.

பாபா படத்திற்காக தியேட்டர்களில் 100 முதல் 500 வரை வசூலித்த கோபத்தில் இருந்த தமிழக மக்கள்,தமிழர்களின் பணத்தை மட்டும் வசூல் செய்து கொண்டு, காவிரிக்காக குரல் கொடுக்காமல் கமுக்கமாக இருப்பதாஎன்று ரஜினி மீது கோபம் கொண்டார்கள்.

இதன் பின்னர் தான் தனது மெளனத்தைக் கலைத்தார் ரஜினி.

இதற்கிடையே பாரதிராஜா, திமுக, அதிமுக என திரையுலகினரும் அரசியல்வாதிகளும் புகுந்து ரஜினிவிவகாரத்துக்கு புதிய பரிமாணம் தந்தனர்.

ரஜினிக்கு திமுக ஆதரவாக களம் இறங்க, ஜெயலலிதாவிடம் பாரதிராஜா பெட்டி வாங்கி விட்டார் என்றகுற்றச்சாட்டுகள் எழுந்தன.

பாரதிராஜாவுக்குப் போட்டியாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து தனது அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரம்போட்டார் ரஜினி. இது உண்ணாவிரதம் அல்ல, அரசியல் மேடை என்று பச்சையாகவே கூறினார் கமல்ஹாசன்.

அத்தனை அரசியல்வாதிகளும் அடித்துப் பிடித்து ஓடி வந்து ரஜினிக்கு மாலை போட்டு தங்களது முகத்தைஅவருக்கு ஞாபகப்படுத்திச் சென்றார்கள்.

நதிகளை இணைக்க ரூ 1 கோடி தரத் தயார் என்று அதிரடியாக பேட்டியும் கொடுத்தார் ரஜினி.

சில நாட்களிலேயே மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப் போவதாகவும், தென் மாநில முதல்வர்களைப் பார்க்கப்போவதாகவும் பேட்டி கொடுத்தார். ஜெயலலிதாவையும் பார்ப்பேன் என்றார்.

உடனடியாக பதிலடி அறிக்கை கொடுத்தார் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். இமயமலைக்கு அடிக்கடி போய்வருவதால் ரஜினி இப்படியெல்லாம் பிதற்றுகிறார் என்று கிண்டலடித்தார் ஓ.பி. ரஜினியை சந்திக்க ஜெயலலிதாதயாராக இல்லை என்பதையே அந்த அறிக்கை மறைமுகமாக சுட்டிக் காட்டியது.

இந் நிலையில் ரஜினி, தனது மக்கள் இயக்கம் குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. அது என்னமாதிரியான இயக்கம், என்ன பணிகளை அது செய்யப் போகிறது என்பது குறித்து இத்தனை நாட்களாக தீவிரமாகஆலோசனை நடத்தி வந்த ரஜினிகாந்த் இப்போது அதை இறுதி செய்து விட்டாராம்.

ப.சிதம்பரம், சோ தவிர எம்.எஸ். சுவாமிநாதன், உதயமூர்த்தி போன்றவர்களையும் ஏதாவது ஒரு வகையில் தன்இயக்கத்தில் இணைக்க முயன்று வருகிறார் ரஜினி. அவர்களுடன் பேசியும் வருகிறார்.

தனது பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி மக்கள் இயக்கம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவுள்ளாராம்.வழக்கம்போல் தனது பிறந்த நாளன்று பெங்களூருக்கோ அல்லது இமயமலைக்கோ எஸ்கேப் ஆகாமல் இம்முறைதமிழகத்திலேயே தங்கி, மிக கிராண்டாக தனது பிறந்த நாளையும் கொண்டாட உள்ளாராம்.

மக்கள் இயக்கம், தனது அரசியல் திட்டங்கள் ஆகியவை குறித்த தனது பிளான்களை அவர் 12ம் தேதி போட்டுஉடைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil